பாலியல் துன்புறுத்தல் குறித்து பிரபல நடிகை தனது பளீச் கருத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இவர் நடித்துள்ளார். மேலும் இவர் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டார். இதுமட்டுமின்றி, இவர் தொடர்ந்து சமூக பிரச்சனைகளில், தனது வெளிப்படையான கருத்தை சமூக வலைதளங்களில் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது ஒரு பளீச் பதிலை கொடுத்துள்ளார். பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறப்பட்ட நிலையில், நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், ''எந்தவித ஆதாரமும் இன்றி, ஒருவர் மீது பாலியர் ரீதியான குற்றச்சாட்டை முன் வைப்பது சட்டப்படி ஏற்புடையது அல்ல'' என பதிவிட்டார். இதையடுத்து நெட்டிசன் ஒருவர், ''உங்களுக்கு நெருக்கமானவருக்கு இது போல நடந்தாலும், இப்படிதான் சட்டம் பேசுவீர்களா..?"' என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கஸ்தூரி, ''நெருக்கமானவர் என்ன.?, எனக்கே இது நடந்திருக்கிறது. இது இப்படிதான் இருக்கிறது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் மீது எனக்கு இரக்கம் உள்ளது. ஆனால், எனது தனிப்பட்ட பார்வை சட்டமாகாது. சட்டம் உருவாக்கப்பட்டதன் காரணமே, போலியான புகார்களை புறந்தள்ளி, ஆதாரத்தை நோக்குவதே'' என அவர் பதிவிட்டுள்ளார்.