நடிகை கனிகா பிகினி உடையில் கடற்கரையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனிகா. மதுரையை சார்ந்த இவர் 5 ஸ்டார் படம் மூலம் அறிமுகமானார். பின் நடிகர் அஜித்துடன் வரலாறு (2006) படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம் ஆனார். ஆட்டோ கிராப், எதிரி படங்களிலும் நடித்துள்ளார்.
ஷங்கரின் அந்நியன், சிவாஜி, சச்சின் படங்களின் ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியதும் கனிகா தான். மலையாளத்தில் மோகன்லால், ஜெயராம், சுரேஷ் கோபி, மம்முட்டி என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். கடைசியாக தமிழில் விஜய் சேதுபதி நடித்த யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்து இருந்தார்.
நடிகை கனிகா தற்போது சன் டிவியின் எதிர் நீச்சல் மெகா தொடரில் தற்போது நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் கனிகாவும் ஒருவர். சமீபத்தில் பீஸ்ட் அரபிக்குத்து பாட்டுக்கு நடிகை கனிகா செமயாக நடனம் ஆடி இருந்தார்.
இந்நிலையில் இன்று தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் நடிகை கனிகா கவனம் ஈர்த்துள்ளார். பிகினி உடையில் கடற்கரை அருகே நிற்கும் புகைப்படங்களை பதிவேற்றி உள்ளார். அதில், "என்னை அந்த நல்ல காலத்திற்கு அழைத்துச் செல்லுங்கள், 'குதிப்பதா குதிக்க வேணாமா?! ' நான் எடுக்க வேண்டிய முடிவு!! நான் விரும்பும் நீல கடல்!! பெருமூச்சு ஓ பெருமூச்சு!!" என கேள்வி எழுப்பி இருந்தார்.
பின் கடலில் குதித்து விட்டதாக மேலும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.