உலகப்புகழ் பெற்ற பீச்சில் நடிகை கனிகா.. ரிசார்ட்டில் ஒரு நாள் வாடகை மட்டும் இம்புட்டா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை கனிகா உலகப் புகழ் பெற்ற கடற்கரையில் இன்பச்சுற்றுலா சென்று அங்கு அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார்.

Actress Kaniha at Karikkathi Beach House Kovalam
Advertising
>
Advertising

Also Read | VIDEO: சூப்பர் சிங்கர் ராஜலெட்சுமி BIGGBOSS சீசன்-6 க்கு போட்டியாளரா வராங்களா? முழு தகவல்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனிகா.
மதுரையை சார்ந்த இவர் 5 ஸ்டார் படம் மூலம் அறிமுகமானார். பின் நடிகர் அஜித்துடன் வரலாறு (2006) படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம் ஆனார்.  ஆட்டோ கிராப், எதிரி படங்களிலும் நடித்துள்ளார்.

Actress Kaniha at Karikkathi Beach House Kovalam

ஷங்கரின் அந்நியன், சிவாஜி, சச்சின் படங்களின் ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியதும் கனிகா தான். மலையாளத்தில் மோகன்லால், ஜெயராம், சுரேஷ் கோபி, மம்முட்டி என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

கடைசியாக தமிழில் விஜய் சேதுபதி நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. நடிகை கனிகா தற்போது சன் டிவியின் எதிர் நீச்சல் மெகா தொடரில் தற்போது நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் கனிகாவும் ஒருவர். நடிகை கனிகா, அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டவர்.

இந்நிலையில் நடிகை கனிகா குடும்பத்துடன் கேரளாவில் உள்ள கோவலம் கடற்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளார். கோவலம் அரபிக்கடலில் இருந்து புகைப்படங்கள் & வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கரிகாத்தி கடற்கரை வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியுள்ளதாக இன்ஸ்டாகிராம் பதிவில் கனிகா கூறியுள்ளார். இந்த கடற்கரை வீட்டில் தங்குவதற்கான வாடகை மட்டும் ஒரு நாளுக்கு 6,200 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

 

Also Read | கீர்த்தி சுரேஷின் விலையுயர்ந்த சொகுசு காருக்கு பூஜை.. விலை மட்டும் இம்புட்டா? என்ன ஸ்பெஷல்!

தொடர்புடைய இணைப்புகள்

Actress Kaniha at Karikkathi Beach House Kovalam

People looking for online information on Kaniha, Kaniha at Karikkathi Beach House, Karikkathi Beach House, Kovalam will find this news story useful.