நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவை மணக்க போவதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று மும்பையில் காஜல்-கவுதம் திருமணம் நடைபெற்றது. இதில் மிகவும் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

திருமணத்துக்கு முன்னதாக நடைபெற்ற மெஹந்தி பங்க்ஷன் புகைப்படங்களை காஜல் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த நிலையில் அவரின் திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.
காஜலின் திருமணத்துக்கு பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்தியளவில் #KajalAggarwal என்னும் ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
VIDEO: மணவாழ்வில் நுழைந்த 'காஜல்' அகர்வால்... திருமண 'வீடியோ' உள்ளே! வீடியோ
Tags : Gautam Kitchlu