குழந்தை பிறப்புக்கு பின் காஜல் அகர்வாலின் முதல் வைரல் போட்டோ.. கூட யார் இருக்காங்க தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: நடிகை காஜல் அகர்வால் குழந்தை பிறப்புக்கு பின்னான தனது புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

தமிழில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால்,  அஜித்துடன் விவேகம், விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், சூர்யாவுடன் மாற்றான், கார்த்தியுடன் நான் மகான் அல்ல, அழகுராஜா, தனுஷ் உடன் மாரி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடைசியாக காஜல் அகர்வா நடிப்பில் தமிழில் கோமாளி படம் வெளியானது.

சென்ற 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஜல் அகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார்.  மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவீட்டார் பங்கு பெற்ற திருமணம் நடைபெற்றது.

சில நாட்களுக்கு முன் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை கணவர் கௌதம் கிட்ச்லு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பின் ஒரே ஒரு புகைப்படம் கர்ப்பமான வயிறுடன் வெளியானது. அதன் பின் காஜல் அகர்வால் சமீபத்தில் தனது கர்ப்பமான வயிறு தெரியும் படி பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் வாழ்த்துடன், வரவேற்பையும் பெற்றது.

பின் தனது வளைகாப்பு புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வளைகாப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

காஜல் அகர்வால் - கௌதம் கிட்ச்லு தம்பதியருக்கு கடந்த மாதம் (19.04.2022) அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு 'நெய்ல்' என பெயரிட்டுள்ளனர். குடும்ப பெயரான கிட்ச்லு உடன் இணைத்து நெய்ல் கிட்ச்லு என இக்குழந்தை அழைக்கப்பட உள்ளது. 

இந்நிலையில் காஜல் அகர்வாலில் தங்கை நிஷா அகர்வால், தனது இன்ஸ்டாகிராமில் காஜல் அகர்வாலின் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை நடிகை காஜல் அகர்வாலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.

https://www.behindwoods.com/bgm8/

குழந்தை பிறப்புக்கு பின் காஜல் அகர்வாலின் முதல் வைரல் போட்டோ.. கூட யார் இருக்காங்க தெரியுமா? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actress Kajal Aggarwal first photo after child birth

People looking for online information on Kajal Aggarwal, Nisha Aggarwal will find this news story useful.