ஸ்வீட் எடுங்க..அழகிய குழந்தைக்கு அம்மாவான காஜல் அகர்வால்.. குழந்தை ஆணா? பெண்ணா? செம தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: நடிகை காஜல் அகர்வால் தம்பதியருக்கு குழந்தை பிறந்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | தமிழ் சினிமாவில் மற்றுமொரு பேரதிர்ச்சி.. பிரபல முன்னணி திரைப்பட தயாரிப்பாளர் காலமானார்!

சென்ற 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஜல் அகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார்.  மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவீட்டார் பங்கு பெற்ற திருமணம் நடைபெற்றது.

சில நாட்களுக்கு முன் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை கணவர் கௌதம் கிட்ச்லு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பின் ஒரே ஒரு புகைப்படம் கர்ப்பமான வயிறுடன் வெளியானது. அதன் பின் காஜல் அகர்வால் சமீபத்தில் தனது கர்ப்பமான வயிறு தெரியும் படி பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் வாழ்த்துடன், வரவேற்பையும் பெற்றது.

பின் தனது வளைகாப்பு புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வளைகாப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அதில் ஒரு புகைப்படத்தில் பிரசவ மாதமாக மே மாதத்தை காஜல் அகர்வாலின் நண்பர் குறிப்பிட்டு இருந்தார். பிரசவத்துக்கு காஜல் அகர்வாலும் ஏரோபிக் உடற்பயிற்சி செய்து தயாராகும் வீடியோவும் வெளியானது.

இந்நிலையில் காஜல் அகர்வால் - கௌதம் கிட்ச்லு தம்பதியருக்கு நேற்று (19.04.2022) அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக  தம்பதியர் அறிவித்துள்ளனர்

Also Read | கை கால்ல பட்டுட போகுது.. ஜிம்மில் தாறுமாறாக மாஸ் காட்டிய தமன்னா.. செம்ம வைரல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actress Kajal Aggarwal Blessed with a baby boy

People looking for online information on காஜல் அகர்வால், Kajal Agarwal, Kajal Agarwal Latest updates will find this news story useful.