அடடே..! நடிகை காஜல் அகர்வாலின் பிறந்த குழந்தைக்கு சூட்டியுள்ள பெயர் இதுதான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால்.

Actress Kajal Aggarwal Baby Named Neil Kitchlu
Advertising
>
Advertising

Also Read | கை கால்ல பட்டுட போகுது.. ஜிம்மில் தாறுமாறாக மாஸ் காட்டிய தமன்னா.. செம்ம வைரல் வீடியோ

தமிழில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால்,  அஜித்துடன் விவேகம், விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், சூர்யாவுடன் மாற்றான், கார்த்தியுடன் நான் மகான் அல்ல,அழகுராஜா, தனுஷ் உடன் மாரி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடைசியாக காஜல் அகர்வா நடிப்பில் தமிழில் கோமாளி படம் வெளியானது.

Actress Kajal Aggarwal Baby Named Neil Kitchlu

சென்ற 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஜல் அகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார்.  மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவீட்டார் பங்கு பெற்ற திருமணம் நடைபெற்றது.

சில நாட்களுக்கு முன் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை கணவர் கௌதம் கிட்ச்லு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பின் ஒரே ஒரு புகைப்படம் கர்ப்பமான வயிறுடன் வெளியானது. அதன் பின் காஜல் அகர்வால் சமீபத்தில் தனது கர்ப்பமான வயிறு தெரியும் படி பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் வாழ்த்துடன், வரவேற்பையும் பெற்றது.

பின் தனது வளைகாப்பு புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வளைகாப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அதில் ஒரு புகைப்படத்தில் பிரசவ மாதமாக மே மாதத்தை காஜல் அகர்வாலின் நண்பர் குறிப்பிட்டு இருந்தார். பிரசவத்துக்கு காஜல் அகர்வாலும் ஏரோபிக் உடற்பயிற்சி செய்து தயாராகும் வீடியோவும் வெளியானது.

இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை காஜல் - கௌதம் கிட்ச்லு தம்பதியினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் குழந்தைக்கு 'நெய்ல்' என பெயரிட்டுள்ளனர். குடும்ப பெயரான கிட்ச்லு உடன் இணைத்து நெய்ல் கிட்ச்லு என இக்குழந்தை அழைக்கப்பட உள்ளது.

Also Read | ஸ்வீட் எடுங்க..அழகிய குழந்தைக்கு அம்மாவான காஜல் அகர்வால்.. குழந்தை ஆணா? பெண்ணா? செம தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Actress Kajal Aggarwal Baby Named Neil Kitchlu

People looking for online information on காஜல் அகர்வால், Kajal Aggarwal, Kajal Aggarwal Baby Name, Kajal Aggarwal Latest updates will find this news story useful.