திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜான்வி கபூர்.. தாவணியில் வந்து சாமி தரிசனம்! வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தனது நண்பர்களுடன் ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுள்ளார்.

Advertising
>
Advertising

ஜான்வி கபூர்,  நியான் பச்சை நிற தாவணி அணிந்திருந்தார். சிறிய காதணிகளும் அணிந்து பாரம்பரிய தோற்றத்தில் ஜான்வி கபூர் காணப்பட்டார்.

விஐபி தரிசனம் மூலம்  ஜான்வி ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்தார். கோயிலுக்குச் சென்ற பிறகு, ரங்கநாயகுலா  மண்டபத்தில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது . ஜான்வி கபூர், தனது அம்மாவான மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள் & நினைவு நாளையொட்டி புகழ்பெற்ற திருப்பதி கோவிலுக்கு அடிக்கடி வருபவர்.

ஜான்வி கபூர், சமீபத்தில் சன்னி கௌஷல் மற்றும் மனோஜ் பஹ்வாவுடன் இணைந்து மிலி என்ற சர்வைவல் த்ரில்லர் திரைப்படத்தில் காணப்பட்டார். இப்படத்தை மாத்துக்குட்டி சேவியர் இயக்கியிருந்தார்.  இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஜான்வி கபூர், தனது அடுத்த திரைப்படமான மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹியில் ராஜ்குமார் ராவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.  அதுமட்டுமின்றி, அவர் வருண் தவானுடன் இணைந்து பவால் என்ற  படத்திலும் நடித்துள்ளார். நிதேஷ் திவாரி இயக்கிய இப்படம் ஏப்ரல் 7, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜான்வி கபூர்.. தாவணியில் வந்து சாமி தரிசனம்! வைரல் வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actress Janhvi Kapoor Visit Tirupati Balaji Temple

People looking for online information on Janhvi Kapoor, Tirupati will find this news story useful.