நடிகை ஐஸ்வர்யா மேனன், ஆள் உயர நாயுடன் விளையாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக கலக்கி வருபவர் ஐஸ்வர்யா மேனன். மிர்ச்சி சிவா நடித்த தமிழ்ப்படம் இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இவர் ஹிப்ஹாப் ஆதியின் நான் சிரித்தால் திரைப்படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். இதையடுத்து இவர் தனது அடுத்தடுத்த படங்களில் பிசியாகியுள்ளார்.
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். ஆள் உயர நாய் ஒன்றுடன் அவர் விளையாடும் வீடியோவை பதிவிட்டுள்ளார் அவர். அந்த நாயின் எடை சுமார் 30 கிலோவாம். இன்னும் கொஞ்சம் பயிற்சிக்கு பின் ஈசியாக இந்த நாயை தூக்கி உடற்பயிற்சி செய்ய போகிறாராம் நம்ம நான் சிரித்தால் நாயகி.!
Tags : Iswarya Menon, Naan Sirithaal Tamil