சென்னை: நிறைமாத கர்ப்பத்துடன் குத்து டான்ஸ் ஆடிய சீரியல் நடிகை ஐஸ்வர்யாவின் வீடியோ வைரலாகி வருகிறது.
Also Read | அப்போ மாலத்தீவு.. இப்போ இத்தாலி! புதிய போட்டோக்களை வெளியிட்டு கலக்கிய மாளவிகா மோகனன்
சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் குடும்பம் ,மகாபாரதம், சந்திரலேகா, பைரவி சீரியல் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா பிரபாகர். சன் குடும்ப விருது விழா நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியவர் இவர்.
மங்களூரை சார்ந்த இவர், பின்னர் விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளிலும் இவரை காண முடியும். ஜோடி நம்பர் 1 சீசன் 3 நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் நடனம் ஆடியுள்ளார். 7C தொடரிலும் விஜய் டிவியில் நடித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.
இவருக்கு கல்கி பிரயா என்ற பெண் குழந்தை கடந்த 2021 நவம்பரில் பிறந்தது. சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா, இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிந்து கொள்வார். கடந்த மகளிர் தினத்தில் கர்ப்பகால பெண்கள் ஆரோக்கியம் குறித்து பதிவிட்டு, நிறைமாத கர்ப்பத்தில் இருக்கும் வீடியோவையும் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் மீண்டும் நிறை மாத கர்ப்பத்தில் நடனம் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ செம்ம வைரலாகி வருகிறது. நடன கலைஞரான ஐஸ்வர்யா, கர்ப்ப காலத்திலும் மருத்துவரின் மேற்கோள் படி நடனமாடலாம் என்பதை பலமுறை பதிவு செய்துள்ளார்.
ஓரு பதிவில் ஐஸ்வர்யா பிரபாகர் "எனது மருத்துவரின் ஆலோசனையை ஏற்று நடனம், உடற்பயிற்சி, வீட்டு வேலைகள் அனைத்தையும் கவனித்துக் கொண்டே இருந்தேன். எனக்கு ஆச்சரியமாக, நான் மேலே உள்ள அனைத்தையும் செய்யும் ஒவ்வொரு முறையும் அதிக ஆற்றலை உணர்ந்தேன். சுறுசுறுப்பான தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் IQ உள்ளது என்றும் ஆராய்ச்சி காட்டுகிறது" என குறிப்பிட்டுருந்தார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8