அதிர்ச்சி!! பெரும் சோகம்! நண்பருடன் கார் விபத்தில் மரணம் அடைந்த இளம் நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தொடர்ந்து திரைப்படத் துறையில் பல அதிர்ச்சியூட்டும் திடீர் உயிரிழப்புகளை  இயற்கையாகவும், விபத்தாகவும் கண்டுவருகிறோம்.

அவ்வகையில் இன்னொரு சோக சம்பவம் நடந்துள்ளது. ஆம், பிரபல மராத்தி நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே கோவாவில் நடந்த கார் விபத்தில் தற்போது பரிதாபமாக  காலமானார்.

25 வயதேயான இந்த இளம் நடிகையும், அவரது காதலர் என கூறப்படும் நண்பரும்  தற்போது நடந்த இந்த கோர விபத்து சம்பவத்தில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தும்படியாக பரிதாபகரமாக இறந்துள்ளனர்.

நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே, தமது நண்பர் சுபாம் தாட்கேவுடன் தான் அந்த காரில் பயணம் செய்தார், அவருடன் ஈஸ்வரிக்கு அக்டோபரில் நிச்சயதார்த்தம் செய்யப்படுவதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் கோவாவில் திங்கள் கிழமை காலை (நேற்றைய தினம்) ஈஸ்வரியின் கார் பாகா க்ரீக்கில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில் இவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த துயர சம்பவம் அதிகாலை 5:30 மணியளவில் நடந்ததாகவும், இந்த கோர விபத்தில் இருவரும் நீரில் மூழ்கி இறந்ததாகவும் கூறப்படுகிறது.

நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே மராத்தி மற்றும் இந்தி படத்தில் நடித்துள்ளார் என்பதும், எனினும் இவர் நடித்த சில திரைப்படங்கள் வெளியிடப்படவில்லை. வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக குறிப்பிட்டுள்ள காவல்துறையின் பொறுப்பாளர் இன்ஸ்பெக்டர் சுராஜ் கவாஸ்,  “காரின் கட்டுப்பாட்டை டிரைவர் இழந்ததால், இந்த விபத்து நடந்ததாக முதன்மை விசாரணை தெரிவிக்கிறது.

கட்டுப்பாட்டை இழந்த பிறகு, கார் எதிரே இருந்த தாழ்வாரத்தைக் கடந்து மீண்டும் ஒரு சிறிய ஓடையில் விழுந்துள்ளது. பின்னர் காலை 7 மணியளவில் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் காரையும் இருவரின் உடல்களையும் வெளியே எடுக்க முடிந்தது.” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Actress Ishwari Deshpande and her friend die in car accident

People looking for online information on Accident, Actress dead, Actress dies of car accident, Car accident, Ishwari Deshpande, IshwariDeshpande, RIPIshwariDeshpande, Young actress dies of car accident will find this news story useful.