நடிகை இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | திருவண்ணம்மாலை கோயிலில் 'வாரிசு' இயக்குனர் வம்சி சாமி தரிசனம்.! TRENDING PHOTOS..
தமிழ், தெலுங்கு சினிமாவில் முறையே கேடி & தேவதாசு ஆகிய படங்களின் மூலம் அறிமுகமான நடிகை இலியானா டி குரூஸ். பின்னர் தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையானார். பின் 2012 ஆம் ஆண்டு வெளியான நண்பன் படத்தில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக ரீ- என்ட்ரி கொடுத்தார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை இலியானா. அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள், பிகினி உடை புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருவார்.
Images are subject to © copyright to their respective owners.
இலியானா, அவ்வப்போது ரசிகர்கள் உடன் கலந்துரையாடல் செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருப்பவர். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதும், ஆலோசனைகள் கூறுவதும் இதில் குறிப்பிடத்தக்கது.
Images are subject to © copyright to their respective owners.
சமீபத்தில் நடிகை இலியானா, நடிகர் விக்கி கவுஷால் & கத்ரினா கைப் மற்றும் சில சினிமா நண்பர்களுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றனர். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது Unfair & Lovely என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் நடிகை இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மருத்துவர்கள் பரிந்துரையில் ஐவி திரவம் மூலம் சிகிச்சை பெற்றதாக கூறியுள்ளார். மூன்று ஐவி திரவ பாட்டில்கள் ஏற்றப்பட்டதாக இலியானா கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக தனது உடல்நிலை குறித்து விசாரிக்க குறுஞ்செய்தி அனுப்பும் நண்பர்கள் & ரசிகர்களுக்கு இலியானா நன்றி தெரிவித்துள்ளார். சிகிச்சையில் குணமாகி தற்போது நல்ல நிலையில் இருப்பதாக அறிவித்துள்ளார். சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெற்றதாகவும் இலியானா அந்த பதிவில் கூறியுள்ளார்.
Also Read | உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்ற இலியானா.. என்ன ஆச்சு? அவரே வெளியிட்ட தகவல்!