வாரிசு படத்தின் 'ரஞ்சிதமே' பாட்டுக்கு டான்ஸ் ஆடிய நடிகை ஹரிஜா.. படு வைரலாகும் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் 'ரஞ்சிதமே' பாடலுக்கு நடிகை ஹரிஜா நடனம் ஆடும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "எனக்கு 56.. அவளுக்கு 24".. "கேர்ள் ஃப்ரண்டுக்கு பதிலா Wife-னு சொன்னேன்".. போட்டுடைத்த பப்லூ.! Exclusive

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார். 'வாரிசு' படத்தை  தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில்  நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் "ரஞ்சிதமே"  வெளியாகியுள்ளது.
இந்த பாடலை நடிகர் விஜய் & மானசி பாடியுள்ளனர். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார்.

இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் தற்போது 50+ மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்நிலையில் இந்த பாடலுக்கு மிஸ்டர் லோக்கல் நடிகை  ஹரிஜா நடனம் ஆடும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. கரு நிற பட்டுப் பாவாடை  உடையில் இந்த ரீல்ஸ் வீடியோவில் ஹரிஜா தோன்றியுள்ளார். ஃ போட்டோகிராபர் தருண் ரமேஷ் இந்த வீடியோவை படம் பிடித்துள்ளார்.

 

Also Read | Keerthi Suresh : அப்பா, அம்மா பர்த்டே.. கொண்டாடி தீர்த்த கீர்த்தி சுரேஷ்..😍‌ வைரல் ஃபோட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Actress Harija Dancing for VARISU Ranjithame Song

People looking for online information on Harija, Harija Dancing Ranjithame Song, Ranjithame Song, Rashmika Mandanna, Varisu, Vijay will find this news story useful.