பீஸ்ட் ஜாலியோ ஜிம்கானா பாட்டுக்கு செம டான்ஸ் ஆடிய நடிகை ஹரிஜா... படு வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு சேலையில் நடிகை ஹரிஜா செம்மய்யான டான்ஸ் ஆடியுள்ள வீடியோ வெளியாகி உள்ளது.

Actress Harija Dancing for Beast Jolly O Gymkhana song
Advertising
>
Advertising

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், எடிட்டர் நிர்மல்குமார் எடிட்டிங்கை கையாள்கிறார்.

Actress Harija Dancing for Beast Jolly O Gymkhana song

இசையமைப்பாளர் அனிருத் இசையில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து YouTube-லும் Instagram Reels-லும் பல சாதனைகளை படைத்து வருகிறது, மற்றும் சில தினங்களுக்கு முன் (19.03.2022) அன்று வெளிவந்த, கு.கார்த்திக் வரிகளில் தளபதி விஜய் பாடிய ஜாலியோ ஜிம்கானா பாடல் ரிலீஸாகி மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. பாடல்களும் அதற்கான புரோமோவும் படத்திற்கு மிகப்பெரிய ஹைப் ஏற்படுத்தி உள்ளதால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது.

தமிழ் புத்தாண்டு  தினத்தை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி படம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது. பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை படத்தின் டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகை ஹரிஜா  ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு சேலையில் நடனமாடி உள்ளார். இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். 

இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது. ஹரிஜா மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actress Harija Dancing for Beast Jolly O Gymkhana song

People looking for online information on பீஸ்ட், Beast, Harija, Jolly o gymkhana will find this news story useful.