ஹன்சிகா மோத்வானி நடிக்கும் புதிய படத்தின் த்ரில்லான GLIMPSE வீடியோ! எப்படி இருக்கு தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள “105 மினிட்ஸ்” படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

Actress Hansika Motwani 105 Minutes Movie Glimpse
Advertising
>
Advertising

நடிகை ஹன்சிகா மோத்வானி ‘ஒன் நாட் பைவ் மினிட்ஸ்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார் . தமிழ் மற்றும் தெலுங்கில்இந்த படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ராஜா டஸ்சா இயக்கி வருகிறார். வீட்டில் தனிமையில் இருக்கும் கதாநாயகி, எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வகைமையில் இந்த படம் உருவாகியுவுள்ளது.

Actress Hansika Motwani 105 Minutes Movie Glimpse

இப்படத்தை பொம்மாக் சிவா தயாரித்து வருகிறார். ஹன்சிகா மோத்வானி மட்டுமே இந்த படத்தில் நடிக்கிறார். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது.கிஷோர் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி எஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் 15 நாள் ரிகர்சலுக்கு பிறகு, வெறும் 6 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் Glimpse வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஹன்சிகா மோத்வானி நடிக்கும் புதிய படத்தின் த்ரில்லான GLIMPSE வீடியோ! எப்படி இருக்கு தெரியுமா? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actress Hansika Motwani 105 Minutes Movie Glimpse

People looking for online information on Hansika Motwani will find this news story useful.