அதிர்ச்சி! ஹோலி பண்டிகை முடிந்து வீடு திரும்பிய இளம் நடிகைக்கு நேர்ந்த பரிதாபம்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹோலி பண்டிகை கொண்டாடி விட்டு, திரும்பிய சமயத்தில் விபத்தில் ஒன்று சிக்கி, நடிகை ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

தெலுங்கு படங்களில், துணை நடிகையாக நடித்து வந்தவர் டோலி காயத்ரி. வெப் சீரியஸ், தொலைக்காட்சி தொடர்கள் உள்ளிட்ட பலவற்றிலும் அவர் நடித்து வந்துள்ளார்.

இதனையடுத்து, நாடு முழுவதும் ஹோலி பண்டிகை, சமீபத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டிருந்தது. பல இடங்களில், மக்கள் வண்ண சாயம் பூசிக் கொண்டு, ஆட்டம் பட்டம் என ஹோலி பண்டிகையை விமரிசையாக கொண்டாடி இருந்தனர்.

கார் விபத்து

அந்த வகையில், நடிகை காயத்ரியும் ஹைதராபாத் பகுதியில் தனது நண்பர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. பண்டிகையை கொண்டாடி முடித்து விட்டு, நண்பர் ஒருவருடன் காரில் திரும்பிக் கொண்டிருக்கும் போது, அந்த கார் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளது.

வேகமாக வந்த கார்

காயத்ரியுடன் வந்த நண்பர் காரினை ஓட்டி வந்துள்ளார். அப்போது கச்சிபவுலி என்னும் பகுதி அருகே, காரினை அவர் வேகமாக ஓட்டிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அந்த சமயத்தில், அங்கிருந்த மருத்துவமனை அருகே ஒரு பெண் வேலை செய்து கொண்டும் இருந்துள்ளார். இதனிடையே, வேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பின் மீது ஏறி, அங்கு வேலை செய்து கொண்டிருந்த பெண்ணின் மீதும் வேகமாக சென்று மோதியதாக கூறப்படுகிறது.

இருவர் பலி

மோதிய வேகத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்து நொறுங்கி போகவும் செய்துள்ளது. இந்த விபத்தில் நடிகை காயத்ரி மற்றும் அங்கு வேலை செய்து கொண்டிருந்த பெண் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காரை ஓட்டி வந்த காயத்ரியின் நண்பர், மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

காரணம் என்ன?

மேலும், மது போதையின் காரணமாக தான் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், ஹோலி பண்டிகை கொண்டாடிய போது காயத்ரியின் நண்பர் அதிகம் மது இருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுபற்றி, மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

ஹோலி பண்டிகை கொண்டாடி விட்டு, வீடு திரும்பிய போது, நிகழ்ந்த விபத்தின் காரணமாக, தெலுங்கு சினிமாவின் துணை நடிகை உயிரிழந்த சம்பவம், அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Actress dolly gayathri dies in car accident fans saddened

People looking for online information on Car accident, Car Crash, Dolly Gayathri, Fans, Holi will find this news story useful.