'பேச்சுலர்' திவ்யபாரதி ஏக குஷி.. கிடைத்த செம்ம வாய்ப்பு.. ஆரம்பமே அமர்களம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை திவ்யபாரதி மெகா ஹிட்டான மலையாள படமான ISHQ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானதாக சூப்பரான தகவல் வெளிவந்துள்ளது.

Advertising
>
Advertising

தமிழ் திரையுலகில் Bachelor படத்தின் மூலம் அறிமுகமானவர் திவ்யபாரதி. இவர் தனது திறமையான நடிப்பின் மூலம் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதன் மூலம் பல படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றது.கடந்த டிசம்பர் 3ஆம் தேதி G.V. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவந்த Bachelor படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை திவ்யபாரதி. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கதாநாயகியின் நடிப்புக்கு என்று தனியாக பாராட்டு கிடைத்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பல தமிழ் சினிமாவின் பல இயக்குனர்கள் கண்களில் மிகவும்  பிரகாசமாக தெரிகிறார்.

சமீபத்தில் நடிகை திவ்யபாரதி இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் தன் முதல் படமான Bachelor படத்தின் அனுபவத்தை பற்றி பகிர்ந்து கொண்டார், G.V. பிரகாஷ் குமார் அருமையான மனிதர் எனவும் தன் நடிப்புத்திறமையை மிகவும் பாராட்டுவார் எனவும், இப்படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களிடமும் அருமையான நட்பு ஏற்பட்டு தற்போது வரை தொடர்கிறது எனவும் கூறினார். மேலும் இந்தப்படத்தின் சுப்பு என்ற கதாபாத்திரம் தன் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக அமைந்துவிட்டது. ஏனென்றால், தனது முதல் படத்திலேயே எல்லாவிதமான நடிப்பையும் வெளிப்படுத்துவது அருமையானது எனவும் கூறினார். மேலும் இந்த படத்தில் எனது நடிப்பை முழுவதுமாக பயன்படுத்த எல்லா காட்சிகளும் அமைக்கப்பட்டிருந்தது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தனது அடுத்த படமும் தமிழில் தான் எனவும் தெலுங்கு, மலையாளம் படங்களில் நடிப்பதற்கு மிகவும் ஆசை எனவும் கூறினார். பின்னர் Bachelor படத்தின் கிளைமாக்ஸ் காட்சி என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது எனவும், மேலும் அது ரசிகர்களிடையே நல்ல மற்றும் கலவையான வரவேற்பையும் பெற்றது எனவும் தெரிவித்திருந்தார்.அடுத்ததாக தொடர்ந்து 2 படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாகவும், அதில் பிக்பாஸ் மூலம் பிரபலமான முகேன் ராவ் உடன் சேர்ந்து நடித்துள்ளதாகவும் கூறினார். வரும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் படங்கள் வெளியாக வாய்ப்புகள் இருக்கிறது எனவும் கூறினார். மேலும் இப்படத்தில் நடிக்க கிடைத்த வரவேற்பை மறக்க மாட்டேன் எனவும் கூறினார். இப்பட வெற்றிக்கு பிறகு பல படவாய்ப்புகள் இவருக்கு குவிந்து வருகின்றது. மலையாளத்தில் மெகா ஹிட் ஆன ISHQ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள்  வெளிவந்துள்ளது. மலையாள படத்தை அருண்ராஜ் மனோகர் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

'பேச்சுலர்' திவ்யபாரதி ஏக குஷி.. கிடைத்த செம்ம வாய்ப்பு.. ஆரம்பமே அமர்களம் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actress Divya bharathy committed in Tamil remake ishq.

People looking for online information on திவ்யபாரதி, Bachelor, Divyabharathi, Ishq will find this news story useful.