”மனசு அங்கயே இருக்கு”… இன்னும் மறக்க முடியல போல…. திவ்யபாரதி வைரல் போஸ்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை திவ்யபாரதி சமீபத்தில் மாலத்தீவு சென்று திரும்பிய நிலையில் அது சம்மந்தமான சில புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

"அதெல்லாம் பண்ண முடியாது'ங்க.." தொடர்ந்து ஆர்ப்பரித்த ரசிகர்கள்.. மேடையில் கடுப்பான ஆண்ட்ரியா

கவனத்தை ஈர்த்த பேச்சிலர்….

தமிழ் திரையுலகில் Bachelor படத்தின் மூலம் அறிமுகமானவர் திவ்யபாரதி. இவர் தனது திறமையான நடிப்பின் மூலம் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதன் மூலம் பல படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கதாநாயகியின் நடிப்புக்கு என்று தனியாக பாராட்டு கிடைத்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பல தமிழ் சினிமாவின் பல இயக்குனர்கள் கண்களில் மிகவும்  பிரகாசமாக தெரிகிறார். மேலும் தனது அடுத்த படமும் தமிழில் தான் எனவும் தெலுங்கு, மலையாளம் படங்களில் நடிப்பதற்கு மிகவும் ஆசை எனவும் கூறினார்.

அடுத்தடுத்த படங்கள்…

பேச்சிலர் படத்துக்கு அடுத்ததாக இப்போது 2 படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாகவும், அதில் பிக்பாஸ் மூலம் பிரபலமான முகேன் ராவ் உடன் ஒரு படத்தில் நடித்துள்ளதாகவும் அவரேக் கூறியுள்ளார். மேலும்  திவ்யபாரதிக்கு அடுத்த வாய்ப்பாக மலையாளத்தில் மெகா ஹிட் ஆன ISHQ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சமூகவலைதளங்களில் இப்போது மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகையாக உருவாகி உள்ளார் திவ்யபாரதி. தனது கிளாமர் புகைப்படங்களை அடுத்தடுத்து பதிவேற்றி வருகிறார். அதுபோலவே சமீபத்தில் ஹிட்டடித்த அரபிக்குத்து பாடலுக்கும் ரீல்ஸ் வீடியோ உருவாக்கி வெளியிட்டு இருந்தார்.

மாலத்தீவு சுற்றுலாவும் இணையத்தைக் கலக்கிய புகைப்படங்களும்…

கோடை விடுமுறைக்கு மாலத்தீவு சென்ற திவ்யபாரதி அங்கிருந்து பல போட்டோஸ் மற்றும் வீடியோக்களை வரிசையாக வெளியிட்டார். அதில் குறிப்பாக அவர் பிகினி உடையில் இருந்த போட்டோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்ததன. திவ்யபாரதி, தனது நண்பர்களுடன் கோகோ கிரி தீவில் இருந்து பிகினி & நீச்சல் உடை புகைப்படங்களை பகிர இணையத்தில் வைரலானது. இப்போது மாலத்தீவில் இருந்து திரும்பி விட்டாலும், இன்னமும் மாலத்தீவிலேயே தன்னுடைய மனதை விட்டுவிட்டு வந்தது போல இருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் மாலத்தீவில் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களையும் இப்போது தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகின்றன.

RRR படத்தின் வியக்க வைக்கும் வசூல் சாதனை… படக்குழு வெளியிட்ட BOX OFFICE போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Actress divyabharathi shared her Maldives photos

People looking for online information on Bachelor, Divyabharathi, Divyabharathi Maldives photos, Maldives photos will find this news story useful.