அழகா இருக்குறது ரொம்ப SIMPLE… நடிகை திவ்யபாரதியின் கவனம் ஈர்த்த புகைப்படமும் கேப்ஷனும்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பேச்சிலர் படத்தின் ஹீரோயின் திவ்யபாரதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ந்துவரும் அவரின் புகைப்படங்கள் ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்று வருகின்றன.

Advertising
>
Advertising

மார்ச் 21 ஆம் தேதி 11.07 மணிக்கு.... செம்ம அப்டேட் கொடுத்த கேஜிஎப் 2 படக்குழு!

அறிமுகமும் வரவேற்பும்….

தமிழ் திரையுலகில் Bachelor படத்தின் மூலம் அறிமுகமானவர் திவ்யபாரதி. இவர் தனது திறமையான நடிப்பின் மூலம் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதன் மூலம் பல படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கதாநாயகியின் நடிப்புக்கு என்று தனியாக பாராட்டு கிடைத்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பல தமிழ் சினிமாவின் பல இயக்குனர்கள் கண்களில் மிகவும்  பிரகாசமாக தெரிகிறார். மேலும் தனது அடுத்த படமும் தமிழில் தான் எனவும் தெலுங்கு, மலையாளம் படங்களில் நடிப்பதற்கு மிகவும் ஆசை எனவும் கூறினார்.

பேச்சிலருக்குப் பிறகு…

பேச்சிலர் படத்துக்கு அடுத்ததாக இப்போது 2 படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாகவும், அதில் பிக்பாஸ் மூலம் பிரபலமான முகேன் ராவ் உடன் ஒரு படத்தில் நடித்துள்ளதாகவும் அவரேக் கூறியுள்ளார். மேலும்  திவ்யபாரதிக்கு அடுத்த வாய்ப்பாக மலையாளத்தில் மெகா ஹிட் ஆன ISHQ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சமூகவலைதளங்களில் அக்டிவ் mode

சமூகவலைதளங்களில் இப்போது மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகையாக உருவாகி உள்ளார் திவ்யபாரதி. தனது கிளாமர் புகைப்படங்களை அடுத்தடுத்து பதிவேற்றி வருகிறார். அதுபோலவே சமீபத்தில் ஹிட்டடித்த அரபிக்குத்து பாடலுக்கும் ரீல்ஸ் வீடியோ உருவாக்கி வெளியிட்டு இருந்தார். அதுபோல ரசிகர்களோடு கேள்வி பதில் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு வருகிறார். இதையடுத்து திவ்யபாரதிக்கு சமூகவலைதளங்களில் ஏராளமாக பாலோயர்ஸ்கள் உருவாகியுள்ளனர்.

கவனம் ஈர்த்த புகைப்படங்களும் கேப்ஷனும்…

இதையடுத்து இப்போது திவ்யபாரதி பகிர்ந்துள்ள அழகான புகைப்படமும் அதற்கு அவர் கொடுத்துள்ள கேப்ஷனும் கவனத்தை ஈர்த்துள்ளன. சிவப்பு டி ஷர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸில் ஸ்டைலாக விதவிதமான கோணங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள திவ்யபாரதி, அதற்கு கேப்ஷனாக ‘அழகாக இருப்பது என்பது நீங்கள் நீங்களாக இருப்பதுதான்’ எனக் கூறியுள்ளார். இந்த புகைப்படமும் கேப்ஷனும் இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

"வாழ்த்து" சொன்ன தனுஷ்க்கு நன்றி சொல்லி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போட்ட வைரல் பதிவு..

தொடர்புடைய இணைப்புகள்

Actress Divyabharathi latest photo and comment

People looking for online information on திவ்யபாரதி, பேச்சிலர், Bachelor, Comment, Divyabharathi, Divyabharathi latest photo will find this news story useful.