தமிழ் திரையுலகில் Bachelor படத்தின் மூலம் அறிமுகமான திவ்யபாரதி. தனது முதல் படத்திலேயே திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் தற்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் மனம் திறந்து பதில் அளித்திருக்கிறார்.
டிசம்பர் 3ஆம் தேதி G.V. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவந்த Bachelor படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை திவ்யபாரதி. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே பல விதமான விமர்சனங்களை பெற்றது. இதனால் சமீபத்தில் இப்படத்தில் நடிகை திவ்யபாரதி ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
அதில், G.V. பிரகாஷ் குமார் அருமையான மனிதர் எனவும் தன் நடிப்புத்திறமையை மிகவும் பாராட்டுவார் எனவும், இப்படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களிடமும் அருமையான நட்பு ஏற்பட்டு தற்போது வரை தொடர்கிறது எனவும் கூறினார். மேலும் இந்தப்படத்தின் சுப்பு என்ற கதாபாத்திரம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக அமைந்துவிட்டது.
ஏனென்றால், தனது முதல் படத்திலேயே எல்லாவிதமான நடிப்பையும் வெளிப்படுத்துவது அருமையானது எனவும் கூறினார். மேலும் இந்த படத்தில் எனது நடிப்பை முழுவதுமாக பயன்படுத்த எல்லா காட்சிகளும் அமைக்கப்பட்டிருந்தது. எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தனது அடுத்த படமும் தமிழில் தான் எனவும் தெலுங்கு, மலையாளம் படங்களில் நடிப்பதற்கு மிகவும் ஆசை எனவும் கூறினார். பின்னர் Bachelor படத்தின் கிளைமாக்ஸ் காட்சி என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது எனவும், மேலும் அது ரசிகர்களிடையே நல்ல மற்றும் கலவையான வரவேற்பையும் பெற்றது எனவும் தெரிவித்திருந்தார்.
அடுத்ததாக தொடர்ந்து 2 படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாகவும் அதில் பிக்பாஸ் மூலம் பிரபலமான முகேன் ராவ் உடன் சேர்ந்து நடித்துள்ளதாகவும் கூறினார். மேலும் அந்தப் படத்தின் First look -ம் வெளியிடப்பட்டிருந்தது.
தனது இன்னொரு படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை எனவும் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது எனவும் வரும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் படங்கள் வெளியாக வாய்ப்புகள் இருக்கிறது எனவும் கூறினார். இப்படம் வெற்றி பெற உதவிய அணைத்து ரசிகர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார். Bachelor படத்திற்கு பிறகு இவரை கண்டிப்பாக பல படங்களில் பார்க்கலாம்.