மாலத்தீவு களைகட்டுது.. பிகினி ராணியாக வலம் வரும் 'பேச்சுலர்' திவ்யபாரதி.. வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாலத்தீவு: நடிகை திவ்யபாரதி மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

Advertising
>
Advertising

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் திவ்யபாரதி முக்கியமானவர். சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்,முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் Bachelor. இந்த திரைப்படத்தில் நாயகியாக நடித்து புகழ் பெற்றுள்ளவர் திவ்யபாரதி. நடிகை திவ்ய பாரதி சில தினங்களுக்கு முன் தனது 30-வது பிறந்தநாளை கொண்டாடினார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்து இருந்தார்.

நடிகை திவ்யபாரதி தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சில தினங்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து இருநதார். இந்த புகைப்படங்கள் பேச்சுலர் படத்தில் கர்ப்பினியாக நடித்த போது எடுத்த BTS படங்கள் என்றும், இந்த படத்தில் நடித்த கதாபாத்திரம் தனக்கு மிகவும் மனதுக்கு நெருக்கமான பாத்திரம் என்றும் கூறி இருந்தார்.

இந்நிலையில் கோடை விடுமுறைக்கு மாலத்தீவு சென்றுள்ள நடிகை திவ்யபாரதி அங்கிருந்து பல போட்டோஸ், வீடியோக்களை வெளியிட்டார். அதில் குறிப்பாக பிகினி உடையில் உள்ள போட்டோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்ததன. திவ்யபாரதி, தனது நண்பர்களுடன் கோகோ கிரி தீவில் இருந்து பிகினி & நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தற்போது நடிகை திவ்ய பாரதி முகேன் ராவுடன் மதில் மேல் காதல் படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் நடிகர் முகேன் ராவ் மற்றும் திவ்ய பாரதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாக்‌ஷி அகர்வால், அனுஹாசன், கஸ்தூரி, பாண்டியராஜ், சுப்பு பஞ்சு, நிழல்கள் ரவி, சுரேகா, தீப்ஸ், KPY பாலா, ஆலியா, ஹாட்லீ, வைதேகி, ஸ்ரீநிதி, சிராஜ், ஜெய் சங்கர் செல்வராஜ், வாசு விக்ரம் மற்றும் ராஜி சாரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். மேலும் மலையாளத்தில் ஹிட்டடித்த 'இஷ்க்' ISHQ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் கதிருடன் நடித்து வருகிறார். 

மாலத்தீவு திவ்யபாரதி வீடியோ இணைப்பு : 

https://www.youtube.com/shorts/hsugjaizVfA

https://www.youtube.com/shorts/ublCg_qAiQs

தொடர்புடைய இணைப்புகள்

Actress divya bharathi Maldives bikini photos goes viral

People looking for online information on Bikini, Dhivya Bharathi, Divya Bharathi, Maldives will find this news story useful.