வலிமை படத்தில் நடித்துள்ள பிரபல சீரியல் நடிகை! டிரெய்லர்ல இதை கவனிச்சீங்களா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வலிமை படத்தின் டிரெய்லரில் உள்ள ஒரு காட்சியில் கயல் நாடகத்தில் நடிக்கும் பிரபல நடிகை தோன்றும் காட்சி இடம் பெற்றுள்ளது.

Advertising
>
Advertising

 

வலிமை படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த டிரெய்லரில் ஒரு காட்சியில் தற்போது சன்டிவியில் பிரபலமாக இருக்கும் கயல் நாடகத்தில் நடிக்கும் நடிகை சைத்ரா ரெட்டி அஜித்துடன் தோன்றி உள்ளார்.

கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது.

'வலிமை' படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துள்ளன்ர். 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் (Motion Poster) 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது.

மோஷன் போஸ்டரைத்தொடர்ந்து வெளியான நாங்க வேற மாரி பாடல் தற்போது 38 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இரண்டாவது சிங்கிள் அம்மா பாடல் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. வலிமை படத்தின் விசில் தீம் இசையும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்புடைய இணைப்புகள்

Actress Chaitra Reddy Acted in Ajith Valimai Movie

People looking for online information on Ajithvalimai, Valimai, Valimaimovie, ValimaiTeaser will find this news story useful.