VIDEO: கையில் கொன்றை பூ..அரபிக்குத்துக்கு டான்ஸ்.. சித்திரை புத்தாண்டை வரவேற்ற நடிகை ANUPAMA PARAMESWARAN!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாட்டுக்கு நடிகை அனுபமா பரமேஸ்வரன் செம்ம ஜாலி நடனம் ஆடி உள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | பீஸ்ட் ஓடும்போது திடீர்னு 'RRR'.. விஜய்க்கு பதில் ராம்சரண்.. ஆபரேட்டரே 'Confuse' ஆயிட்டாரு..

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, பிற ரோல்களில் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளார். அனிருத் இசையமைத்து ஜோனிதா காந்தியுடன் இணைந்து பாடியுள்ளார். 300 மில்லியன் வியூசை இந்த பாடல் கடந்துள்ளது.

மேலும் இசையமைப்பாளர் அனிருத், நடிகை சமந்தா, இயக்குனர் அட்லி, பாடகி ஜோனிதா காந்தி, வேதிகா, பூஜா ஹெக்டே, நெல்சன் மகன் ஆத்விக், திவ்யபாரதி, சஞ்சனா, ஷிவானி நாராயணன், கீர்த்தி சுரேஷ், சுஜிதா, கனிகா, யுவன் சங்கர் ராஜா, சம்யுக்தா ஹெக்டே, ரித்திகா சிங், கிரண் உள்ளிட்ட பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்தனர்.

இந்த பட்டியலில் நடிகை அனுபமா பரமேஸ்வரனும் இணைந்துள்ளார். இன்று புத்தாண்டு, விஷூவை ஒட்டி தமிழர்கள் போல் கொன்றை மலர் வைத்து, முக்கனிகள் வைத்து மலையாளிகள் புத்தாண்டை கொண்டாடுவர். சித்திரைப் புத்தாண்டின் சிறப்பான கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்கும் நேரத்தில் அதனை கையில் ஏந்தி நடிகை அனுபமா பரமேஸ்வரன் செம்ம டான்ஸ் ஆடியுள்ளார். இந்த வீடியோ இப்போது செம்ம வைரலாகி வருகிறது.

 

Also Read | முதல் முறையாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'வலிமை' திரைப்படம்.. எப்போ? எதுல?

 

தொடர்புடைய இணைப்புகள்

Actress Anupama Parameshwaran Sema Dancing for Arabic Kuthu Song with Saree

People looking for online information on Anupama Parameswaran, Anupama Parameswaran Dance Arabic kuthu song, Anupama Parameswaran Latest video, Arabic Kuthu song will find this news story useful.