அனுபமா மற்றும் கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கு திருமணமா?... உண்மையை உடைத்த நடிகையின் தாய்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த படம் பிரேமம். சாய் பல்லவி, மடோனா சபாஸ்டின், அனுபமா பரமேஷ்வரன் ஆகியோருக்கு அறிமுகப்படமாக அமைந்த இந்த படம் மலையாள திரையுலகைத் தாண்டி தமிழ் நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. படத்தில் நடித்த அனைத்து நாயகிகளும் சினிமா துறையில் இன்று தனக்கென தனி முத்திரை பதித்து வருகின்றனர். குறிப்பாக அனுபமா பரமேஷ்வரன்- மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் கவனம் காட்டி வந்தார். தமிழில் கொடி படத்தில் தனுஷுடன் ஜோடி சேர்ந்த அனுபமா, லாக்-டவுனுக்கு முன்பு வரை அதர்வாவுடன் ’தள்ளிப் போகாதே’ படத்தில் நடித்து வந்தார்.

இந்நிலையில் நடிகை அனுபமா மற்றும் கிரிக்கெட் வீரர் பும்ரா இருவரும் காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் பொய்யான வதந்திகள் பரவி வந்தது. அதேபோல தற்போது ஒரு படி மேலே போய் அனுபமா மற்றும் பும்ராவுக்கு திருமணம் நடக்க இருக்கிறது என்று பல செய்திகள் உலாவி வருகிறது. இந்நிலையில் தாயார் இதுபற்றி தற்போது மனம் திறந்துள்ளார். அவர் கூறும் பொழுது "அனுபமா பற்றி எல்லோரும் மறக்கத் தொடங்கும்போது ஒரு புதிய கதை தோன்றும். நாங்கள் இது போன்ற வதந்திகளை  நேர்மறை அர்த்தத்தில் மட்டுமே எடுத்துகொள்கிறோம். அனுபமா, பும்ராவை தொடர்புபடுத்தி பல கதைகள் முன்பே வந்தன. இந்த கதைகளுக்கு பிறகு Instagram-ல் கூட ஒருவருக்கொருவர் பின் தொடர்வதில்லை என்று நினைக்கிறேன். ஒருமுறை பும்ரா, அனுபமா ஷூட்டிங்கிற்காக சென்ற அதே ஹோட்டலில் தங்கியிருந்தார்.அப்போதுதான் அவர்கள் இருவரும் முதன் முதலாக ஒருவரை ஒருவர் சந்தித்தனர். ஏன் இப்படி ஒரு கதை இப்போது பரவி வருகிறது என்று புரியவில்லை. தெலுங்கில் கார்த்திகேயா 2 படத்தின் படப்பிடிப்புக்காக தான் ராஜ்கோட்டுக்கு சென்றிருந்தார் அனுபமா" என்று கூறியுள்ளார்.

Tags : Anupama

தொடர்புடைய செய்திகள்

Actress anupama mother about rumours அனுபமா மற்றும் பும்ராவுக்கு திருமணமா?

People looking for online information on Anupama will find this news story useful.