பிரபல நடிகை தனக்கு நடைபெற்ற பாலியல் சீண்டல் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
மலையாள சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் அன்னா பென். கும்பலங்கி நைட்ஸ், ஹெலன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இவர் பிரபலமானார். மேலும் இந்த ஆண்டு இவர் நடித்த கப்பெல்லா திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் நடிகை அன்னா பென் ஒரு அதிர்ச்சி தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், ''நான் ஷாப்பிங் சென்ற போது, இரண்டு வாலிபர்கள் என்னை பின் தொடர்ந்து வந்து, எனது பின்னால் தட்டினார்கள். அப்போது நான் ஷாக் ஆகிவிட்டேன். என்னால் எந்த எதிர்விணையும் ஆற்றமுடியவில்லை. நான் ப்ளான்க் ஆனது போல் உணர்ந்தேன்.
என் சகோதரி என்னவென்று கேட்டபோது கூட என்னால் சொல்ல முடியவில்லை. அவர்களை தவிர்க்க வேண்டும் என்று நான் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டேன். மேலும் அவர்கள் என்னை ஃபாலோ செய்து வந்து பேச முயற்சிக்க, நான் வேலையை பாருங்கள் என சொல்லிவிட்டு சென்றுவிட்டேன்.
ஆனால் என்னால் அவர்களை எதுவும் செய்யமுடியவில்லை. நான் அவர்களை அந்த இடத்திலேயே பளார் என அறைந்திருக்க வேண்டும் என தோன்றுகிறது. அவர்கள் எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல் அங்கிருந்து சென்றதை பார்த்தேன். எப்போதுமே பெண்களே இப்படியான பிரச்சனைகளில் சிக்குவதை பார்க்க முடிகிறது. ஒரு பெண் தன்னை எப்போதுமே பாதுகாத்து கொண்டிருப்பது மிகவும் கஷ்டமான ஒன்று. இதுபோல கீழ்தரமாக செயல்படும் ஆண்கள் மனிதர்களே இல்லை'' என்று அவர் எமோஷனலாக தெரிவித்துள்ளார்.