தமிழ் சினிமாவில் சிறந்த பர்ஃபார்மன்ஸ் சார்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென்ரு ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகை அஞ்சலி.

‘பேரன்பு’, ‘லிசா’ படங்களை தொடர்ந்து நடிகை அஞ்சலி நடித்துள்ள விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’ திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் விடுமுறை கொண்டாடி வரும் அஞ்சலி, தனது பிறந்தநாள் அதுவுமாக த்ரில்லிங்கான விஷயம் ஒன்றை செய்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
சமீபத்தில் தனது 33வது பிறந்தநாளை கொண்டாடிய அஞ்சலி, தனக்கு மிகவும் பிடித்த ஸ்கை டைவிங் செய்து அசத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அஞ்சலி, ‘பறப்பதற்கு தைரியம் இல்லாமல் இறக்கை இருந்து என்ன பயன்’ என தனது த்ரில் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.