நடிகை ஏமி ஜாக்சன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
நம்ம கௌதமியா இது..? ட்ரெண்டாகும் கௌதமி காலெண்டர் – விண்டேஜ் pic!
தமிழ் சினிமா அறிமுகம்
இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவான 'மதராஸப்பட்டினம்' திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் எமி ஜாக்ஸன். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவரான இவருக்கு அந்த படம் நிறைய ரசிகர்களைப் பெற்று தந்தது. அதன் பிறகு அவர் நடித்த 'தாண்டவம்', 'ஐ', 'தங்க மகன்', 'கெத்து', 'தெறி' படங்கள் பரவலான வரவேற்பைப் பெற்றன. கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் '2.0' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.
ஏமி ஜாக்சன் திருமனம்..
தமிழ் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கும் போதே அவர் George Panayiotou என்ற தொழிலதிபரைக் காதலிப்பதாக அறிவித்தார். அதையடுத்து அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு தற்போது ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அவ்வப்போது குழந்தையுடனான புகைப்படத்தை சமூகவலைதளங்களின் மூலமாக பகிர்ந்து வருகிறார். இப்போது லண்டனில் வசிக்கும் எமி ஜாக்சஜ்ன் திருமனத்துக்குப் பிறகு படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூகவலைதளங்களின் மூலமாக ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார்.
மகனோடு அன்னையர் தினம்…
சமீபத்தில் தனது மகனோடு அன்னையர் தினம் கொண்டாடிய அவர் மகனை பற்றி உருக்கமாக "நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். என் பையன் ஆண்ட்ரியாஸ் முன், இந்த வாழ்வு எனக்கு நியாபகம் இருப்பதில்லை. அவனது முகம், கண்ணம், சிறிய சிரிப்பை பார்க்கும் போது ஒவ்வொரு காலையும் எனக்கு தூய்மையான தியானம் போன்றது'' என்று கூறியிருந்தார். அந்த அளவிற்கு மகனின் மீது பாசம் வைத்துள்ள எமி ஜாக்சன் சினிமா வாழ்க்கையில் இருந்து விலகி தற்போது முழு நேரமாக தனது மகனை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை கையாள்கிறார்.
இன்ஸ்டாவில் வைரலாகும் ஸ்டோரி
இந்நிலையில் தற்போது எமிஜாக்சன் பகிர்ந்துள்ள அவரின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. அந்த வீடியோவில் மஸாஜ் பார்லரில் மசாஜ் செய்துகொள்ளும் அவர் அதன் பிறகு பேசும் வீடியோவில் ‘மஸாஜுக்கு பிறகு மிகவும் ரிலாக்ஸாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது.
“அது ஒன்னு தவிர இந்த வாரம் okay”.. கால்ல சக்கரத்த கட்டி பறக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!