90S KIDS ஹீரோயின் அமலா!!.. 30 வருஷத்துக்கு அப்றம் தமிழ் படத்துல ரீ எண்ட்ரி.. ‘யார் ஹீரோ தெரியுமா?’

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, மோகன் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.

மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது கதவு, வேலைக்காரன், வேதம் புதிது, அக்னி நட்சத்திரம், கொடி பறக்குது, மாப்பிள்ளை, வெற்றி விழா, மவுனம் சம்மதம் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். 1991-ல் வெளியான ‘கற்பூர முல்லை’ படத்தில் அமலா, கடைசியாக நடித்திருந்தார்.

தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்த அமலா, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில்தான், 30 வருடங்களுக்கு பிறகு தற்போது டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் கணம் எனும் திரைப்படத்தின் மூலம் நடிகை அமலா தமிழுக்கு ரீ எண்ட்ரி கொடுக்கிறார். ஆம், தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த அமலா, தற்போது 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கணம் படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.

இந்த படத்தில் நடிகர் ஷர்வானந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இவரும் 2015-ல் வெளியான ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை எனும் தமிழ் படத்தில் நடித்து இருந்தார். குறிப்பாக சரவணன் இயக்கத்தில் உருவான ‘எங்கேயும் எப்போதும்’ திரைப்படத்தில் ஷர்வானந்த் நடித்திருந்தார்.

இந்நிலையில் கணம் படம் மூலம் தமிழில் நடிக்கும் ஷர்வானந்த்துக்கு, நடிகை ரீதுவர்மா ஜோடியாக நடிக்கிறார். நடிகை ரீதுவர்மா, தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரக்‌ஷன், நிரஞ்சனி அகத்தியன் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார்.

இதேபோல், நடிகர் அசோக் செல்வன், நித்யா மேனன் நடித்து தமிழில் வெளியான தீனி படத்திலும் ரீது வர்மா நடித்திருந்தார். இதன் பிறகு ஷர்வானந்துக்கு ஜோடியாக ரீதுவர்மா கணம் திரைப்படத்தில் நடிக்கிறார்.

இவர்களைத் தவிர கணம் திரைப்படத்தில் நாசர், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். இந்த படத்தை ஸ்ரீகார்த்திக் இயக்குகிறார். தயாரிப்பு S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு.

Also Read: போடு!! செம்ம மாஸ்! தாமிரபரணி, ஆம்பள படங்களைத் தொடர்ந்து விஷால்32-ல் இணையும் பிரபலம்!..

தொடர்புடைய இணைப்புகள்

Actress Amala re entry in tamil Sharwanand movie

People looking for online information on Dream Warrior Pictures, Sharwanand, SR Prabhu, SR Prakash will find this news story useful.