நடிகை ஆல்யா மானஸா வெளியிட்ட புதிய வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

விஜய் டிவியின் ராஜா ராணி தொடரில் நடித்தவர்கள் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அண்மையில் ஆல்யா மானஸாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்களின் குழந்தைக்கு அய்லா என பெயர் சூட்டி மகிழ்ந்தனர் இருவரும்.
இந்நிலையில் தற்போது ஆல்யா மானஸா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் உடல் எடை அதிகரித்திருந்த அவர், கடுமையாக உடற்பயிற்சி செய்து, எடை குறைத்துள்ளார். இதன் வீடியோவை அவர் வெளியிட்டு, இதற்கு காரணம் தனது கணவர் சஞ்சீவ் தான் என தெரிவித்துள்ளார். ஆல்யா மானஸா வெளியிட்ட இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகிறது.
Tags : Alya Manasa, Sanjeev Karthick