நடிகை ஆல்யா மானஸா வெளியிட்டுள்ள புதிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியின் ராஜா ராணி தொடரில் நடித்தவர்கள் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அண்மையில் ஆல்யா மானஸாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்களின் குழந்தைக்கு அய்லா என பெயர் சூட்டி மகிழ்ந்தனர் இருவரும். இதனிடையே ஆல்யா மானஸா தொடர்ந்து தங்கள் மகளின் க்யூட் புகைப்படங்களையும் வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஆல்யா தற்போது ஒரு ரீசன்ட் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மகளுடன் அவர் கொஞ்சி விளையாடும் வீடியோ பகிர்ந்துள்ளதுடன், ''பெண் குழந்தைகள் பூக்கள் மாதிரி. அவை எப்போதுமே மலர்ந்து இருக்கும்'' என பதிவிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் ஆல்யாவின் வீடியோவை ரசித்து வருவதுடன், மூன்று லட்சம் பார்வையாளர்களை கடந்து இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.