ALYA MANASA : விபத்தில் சிக்கி எலும்பு முறிவு.. “சஞ்சீவ் கதறி அழுறார்..”.. நடிகை ஆல்யா மானசா உருக்கம் ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டிவியில் 'இனியா' சீரியலில் கதாநாயகியாக நடித்த வரும் நடிகை ஆல்யா மானசா, திடீரென சாலை விபத்தில் சிக்கியதில் தமக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகா தெரிவித்துள்ள விஷயம் அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | விஜய் -யின் ‘வாரிசு’ -ல மகேஷ் பாபு -வின் ‘மகரிஷி’ பட தாக்கம் இருக்கா? - வம்சி Open பதில்

விஜய் டிவி 'ராஜா ராணி' சீரியலின் முதல் சீசனில், செம்பா என்கிற கதாபாத்திரத்தில் வெகுளியான பெண்ணாக நடித்து சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்தவர் ஆல்யா மானசா.  பின்னர் இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆல்யா. இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதனிடையே ஆல்யா மானசா தன்னுடையாக மகள் ஐலாவை பெற்றெடுத்த பின்னர், விஜய் டிவி 'ராஜா ராணி 2' சீரியலில் நடித்து வந்தார். பின்னர் இரண்டாவது முறையாக ஆல்யா மானசா கர்ப்பமானதால், சீரியலில் இருந்து வெளியேறினார். இதனிடையே சன் டிவியில் இனியா எனும் தொடரில் கதாநாயகியாக ஆல்யா நடிக்கத் தொடங்கினார்.

இந்நிலையில் தான், நடிகை ஆல்யா மானசா, தனக்கு அடிப்பட்டு இருப்பதாகவும் தன் காலில் பெரிய கட்டு போட்டிருப்பதாகவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் விரைவில் குணம்பெற வேண்டும் என அவருக்கு தன்னம்பிக்கை வார்த்தைகளை கொடுத்து அன்பை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை எடுத்த அடுத்த நாளே ஆல்யா மனசா ஷூட்டிங்கிற்கு வந்துள்ளார்.

மேலும் அவரின் நிலையைப் பார்த்து அவர்து கணவர் சஞ்சீவ் கதறி அழுததாகவும், இந்த விபத்தால், தன் கணவரது அன்பை இன்னும் இன்னும் அறிந்துகொள்வதாகவும் நடிகை ஆல்யா மானசா தன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

Also Read | "Title அடிக்குற எண்ணம் இல்லையா..? " .. மைனாவிடம் கேள்விகளை அடுக்கிய விஜே பார்வதி.! bigg boss 6

தொடர்புடைய இணைப்புகள்

Actress alya manasa met accident admitted in hospital

People looking for online information on Alya Manasa, Alya manasa accident will find this news story useful.