நடராஜர் உருவத்தை பச்சை குத்திய அஜித் பட நடிகை.. தேவார பாடலுடன் வைரலாகும் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடராஜர் உருவத்தை பிரபல நடிகை பச்சை குத்தியுள்ளார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் H. வினோத் இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில்,  அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவானது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் பமிதா பானு எனும் கதாபாத்திரத்தில் அபிராமி வெங்கடாசலம் நடித்திருந்தார். முன்னதாக நோட்டா, களவு ஆகிய படங்களில் அபிராமி வெங்கடாசலம் நடித்துள்ளார். சமீபத்தில் மாதவன் இயக்கத்தில் வெளிவந்த ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படத்திலும் அபிராமி வெங்கடாசலம் நடித்திருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

இவரது நடிப்பில் தற்போது லியோ, நெருஞ்சி, காஜேன், ஆகஸ்ட் 27, துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. அபிராமி, பல இசை ஆல்பங்கள், குறும் படங்கள், வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபிராமி வெங்கடாசலம். பிக்பாஸ் அல்டிமேட் முதல் சீசனிலும் அபிராமி கலந்து கொண்டார். இதில் 5-ஆம் இடத்தை பிடித்தார்.

இந்நிலையில் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை அபிராமி வெங்கடாசலம், தனது முதுகில் நடராஜர் உருவத்தை பச்சை குத்தி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் "ஆடல்வல்லான்🙏🏼மாசில் வீணையும்
மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை
பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே✨" என்ற திருநாவுக்கரசர் பெருமானின் தேவாரப் பாடலை பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில், "எனக்கு பக்தி குறித்து யாரும் பாடம் புகட்ட வேண்டாம். இது எனக்கும் என் கடவுள் சிவனுக்கும் இடையேயான தனிப்பட்ட விஷயம். இதிலிருந்து விலகியே இருங்கள்." என அபிராமி பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Actress Abhirami Venkatachalam Tattooed Natarajar on her back

People looking for online information on Abhirami Venkatachalam will find this news story useful.