நடிகர் விவேக் மறைந்த துயரம் தமிழ்நாட்டை சோகத்தில் ஆழ்த்தியது. எனினும் விவேக்கின் இறுதிச் சடங்கு அரசுமுறை மரியாதையுடன் முழங்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
நடிகர் விவேக் திரைத்துறையில் நகைச்சுவை நடிகராக சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் காமெடிகளை நிறைய பண்ணியவர். அத்துடன் விவேக், சமூக பங்களிப்பையும் ஆற்றியவர். அதன்படி பல்வேறு அரசு சார்ந்த நலத்திட்டங்களுக்கும் இயற்கை, சுற்றுச்சூழல் உள்ளிட்டவற்றுக்கும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் முன்னெடுத்த மரக்கன்றுகளை நட்ட விவேக் இதுவரை 33.5 லட்சம் மரக்கன்றுகளை வெற்றிகரமாக நட்டுச் சென்றுள்ளார்.
அதைக் குறிப்பிட்டு விவேக்கின் இறுதி அஞ்சலியில் இயக்குநர் ஷங்கர் பேசும்போது, ஜென்டில்மேன் படத்தில் மனிதாக பிறந்தால் 4 பேருக்கு நிழல் தரும் மரத்தையாவது நட்டு வைக்க வேண்டும் என வசனம் வைத்திருந்ததாக பேசினார். இந்நிலையில் நடிகர் ஆத்மிகா தமது ட்விட்டர் பக்கத்தில், “நடிகர் திரு.விவேக் அவர்களின் நினைவாக எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன். என்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இந்த பணியைச் செய்ய முடிவு செய்துள்ளேன். அவர் விட்டுச்சென்ற ஒரு கோடி மரங்கள் நடுவது என்ற அவரின் மகத்தானக் கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம்.” என பதிவிட்டுள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர் ஒருவர் தளபதி விஜய் முன்னொரு வேளையில் தமது வீட்டில் கன்றுகளை நடும் வைரலான புகைப்படத்தை ஆத்மிகாவுடன் மெர்ஜ் செய்து புதுமையான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் நடிகர் விவேக்கின் கனவுகளை நாம் நிறைவேற்றுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார் அந்த ரசிகர்.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு படத்தில் விவேக் பாராட்டத்தக்க அப்பா வேடத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் நாயகியாக நடித்தவர் தான் ஆத்மிகா. தொடர்ந்து கண்ணை நம்பாதேன், காட்டேரி, நரகாசுரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
ALSO READ: "கடைசியா என் கைலதான் வாங்கி சாப்ட்டாரு" - விவேக் வீட்டு சமையல் பெண்மணி Emotional பேட்டி