KGF யாஷ் கூட நடிக்க சான்ஸ் கெடச்சா எப்படி இருக்கும்? ஆசையை வெளிப்படுத்திய பிரபல நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

யாஷ் உடன் நடிப்பது குறித்து பிரபல நடிகை மனம் திறந்து உள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | தளபதி விஜய் கூட எப்போ நடிக்க போறிங்க? பிரபல பாலிவுட் நடிகை சொன்ன செம்ம பதில்!

கேஜிஎஃப் 1 மற்றும் கேஜிஎஃப்  2 ஆகிய இரண்டு படங்களின் மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றியை  அடுத்து இப்போது இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகராக யாஷ் மாறியுள்ளார்.

சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் ஒரு மத்திய தர குடும்பத்தில் இருந்து வந்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கும் யாஷுக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் உருவாகி உள்ளனர். தமிழ் நாட்டில் மட்டும் இந்த படம் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் (ஸ்கிரீன்) ரிலீசானது. உலகம் முழுவது 10,000 ஸ்கிரினில் ரிலீசாகி 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் பிரபல நடிகை ஆகன்ஷா சிங்கிடம் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர், " ராக்கிங் ஸ்டார் யாஷ் கூட படம் நடிக்க கையெழுத்து போடுவீங்களா?" என கேட்ட கேள்விக்கு பதிலாக "யார் வேணாம்னு சொல்வாங்க?" என பதில் அளித்துள்ளார். இந்த பதிலுக்கு பின்னணியில் தன்னுடைய புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

நடிகை ஆகன்ஷா சிங் இந்தி தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவர் இந்தி, கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். ந போலே தும் நா மைனே குச் கஹா (2012) என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்தவர். தமிழில் நெஞ்சம் பேசுதே என்ற பெயரில் இந்த சீரியல் பாலிமர் டி.வியில் ஒளிபரப்பானது.

பின் இந்தி படமான வருண் தவான் - அலியா பட் நடித்த பத்ரிநாத் கி துல்ஹனியா (2017) திரைப்படத்திலும் அறிமுகமானார்.  சிங் மல்லி ராவா (2017) படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார், பின் அவர் கன்னடத்தில் பைல்வான் (2019) படத்திலும், தமிழில் கிளாப் (2022) படத்திலும் அறிமுகமானார். இதில் பைல்வான் படத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சுதீப்புக்கு ஜோடியாக நடித்திருந்தார். நாகர்ஜூனாவுடன் தேவதாஸ் படத்திலும் நடித்து பிரபலமானவர்

2021ல் பரம்பரா வெப் சீரிஸிலும், 2022ல் ஜெய் நடித்த வீரபாண்டிய புரம் படத்திலும் நடித்திருந்தார். கடைசியாக ரன்வே 34 படத்தில் அஜய் தேவ்கன், அமிதாப் பச்சனுடன் நடித்துள்ளார். இந்த படம் கடந்த மாதம் வெளியானது.

அடுத்ததாக  நானி தயாரிக்கும் Meet Cute ஆந்தாலஜியில் நடிக்க உள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த நடிகை ஆகன்ஷா, தனது நீண்டகால காதலரான குணால் சைனை 2014 இல் திருமணம் செய்து கொண்டார்.

Also Read | உலகின் உயரமான மிகப்பெரிய திரையில் 'விக்ரம்' படத்தின் டிரெய்லர்..வீடியோவுடன் வந்த மாஸ் UPDATE

Actress Aakanksha Singh about movie with KGF Yash

People looking for online information on Aakanksha Singh, Bollywood actress, KGF Yash will find this news story useful.