பாலிவுட்டை போல தமிழ் சினிமாவில் 'GROUPISM'.. யார் அவர்கள்.?! - ஷாந்தனு - நட்டி நடராஜ் பரபரப்பு கருத்து.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் நிலவும் Groupism குறித்து நடிகர்கள் ஷாந்தனு, நட்டி நடராஜ் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர். 

அண்மையில் பாலிவுட்டில் இளம் நடிகரான சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இதற்கு பாலிவுட்டில் வாரிசுகளின் நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் Nepotism தான் காரணம் என சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பின. சரியான திறமைகள் ஒதுக்கப்படுகின்றன எனவும் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். 

இந்நிலையில் தமிழ் சினிமாவில் நடிகராகவும் ஒளிப்பதிவாளராகவும் கலக்கி வரும் நட்டி நடராஜ் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், ''தமிழ் சினிமால  நெபோட்டிசம் இருக்கா இல்லையான்னு தெரியல..  ஆனா குரூபிசம் இருக்கு...  யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத  யாரோ  நிர்ணயிக்கறாங்க... யாருங்க நீங்க????...'' என தெரிவித்தார். 

இதையடுத்து நட்டி நடராஜின் ட்விட்டை குறிப்பிட்டு, நடிகர் ஷாந்தனு வெளியிட்டுள்ள பதிவில், ''#Nepotism இங்கேயும் உள்ளது.. அதே குருபிசம் நபர்கள் தான் நம்முடன் யார் வேலை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள்... தரத்தை பராமரிக்க அவர்கள் ஒரு சிலரை ஆதரிக்கிறார்கள், மற்றவர்களை தங்கள் தரத்தை அதிகரிக்க அனுமதிக்க மாட்டார்கள்'' என தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டில் நிலவுவதாக இவர்கள் குறிப்பிட்ட Groupism குறித்தும் அவர்கள் யார் என்பது குறித்தும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். 

 

பாலிவுட்டை போல தமிழ் சினிமாவில் 'GROUPISM'.. யார் அவர்கள்.?! - ஷாந்தனு - நட்டி நடராஜ் பரபரப்பு கருத்து. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

கோலிவுட் குரூப்பிசம் பற்றி நட்டி நடராஜ் - ஷாந்தனு கருத்து | Actors Shanthnu and Natty Natraj opens on Groupism in Kollywood Cinema

People looking for online information on Bollywood, Groupism, Kollywood, Natty Natraj, Nepotism, Shanthanu Bhagyaraj will find this news story useful.