வாணி ஜெயராம் மறைவு.. புகழஞ்சலி செலுத்திய குஷ்பு, ராதிகா, இமான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு பிரபலங்கள் பலர் புகழஞ்சலி செலுத்தி உள்ளனர்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தமது 78 ஆவது வயதில் வாணி ஜெயராம் காலமாகி உள்ளார்.

இசை  உலகில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை நடத்திய வாணி ஜெயராமின் மறைவு, அவரது ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரையும் கண்ணீரில் நனைய வைத்துள்ளது.

தமிழில் 1973 ஆம் ஆண்டு வெளியான "தாயும் சேயும்" என்ற திரைப்படத்தில் பின்னணி பாடகியாக பிரபலமானவர் வாணி ஜெயராம். மொத்தம் 19 மொழிகளில் சுமார் 10,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ள வாணி, தமிழில் மட்டும் சுமார் 1500 பாடல்கள் வரை பாடி உள்ளார். மல்லிகை என் மன்னன் மயங்கும், ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகம் உள்ளிட்ட பாடல்கள் முக்கியமானவை.

வாணி ஜெயராமனுக்கு கடந்த குடியரசு தின விழாவின் போது பத்ம பூஷன் விருதும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இசையமைப்பாளர் இமான் தனது பதிவில், “பழம்பெரும் பாடகி வாணி ஜெயராம் அம்மா இப்போது நம்மிடம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "மாலை" படத்திற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் தான் அவரை சந்தித்து பாடலை பதிவு செய்தேன். அவரது மறைவு அதிர்ச்சியாக உள்ளது. ஆழ்ந்த இரங்கல்.” என இமான் பதிவிட்டுள்ளார்.

நடிகை ராதிகா தமது இரங்கல் பதிவில், வாணி ஜெயராம் மறைவு  மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. நேற்றிரவு அவரது பாடலை கேட்டு விட்டு,  எவ்வளவு அழகாக பாடுகிறார் என்று எனது கணவர் சரத் குமாரிடம் கூறினேன்.” என ராதிகா இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பு, "“நாம்  உன்னதமான ஒருவரை இழந்துவிட்டோம். பல வருடங்களாக நம்மைக் கவர்ந்த ஒரு குரல் இன்று நம்மை நொறுங்க வைத்து பிரிந்து சென்று விட்டது. அவரின் இனிமையான, மென்மையான இயல்பு அவரது குரலில் ஒலித்தது. நீங்கள் என்றும் நினைவில் வைத்துக் கொள்ளப்படுவீர்கள் அம்மா” என குஷ்பு கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Actors Music Directors Condolences for Vani Jayaram Demise

People looking for online information on D Imman, Khushbu, Radhika, Vaani Jayaram will find this news story useful.