உலகின் மிக உயரமான முருகன் சிலை கொண்ட கோவிலில் வழிபாடு செய்திருக்கிறார் நடிகர் யோகிபாபு.
Also Read | நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!
தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகராக வலம்வருபவர் யோகிபாபு. அண்மையில் வெளியான லவ்டுடே திரைப்படத்தில் யோகிபாபுவின் நடிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. இவருடைய நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படம் தேசிய விருதை வென்றதுடன் அதில் இவருடைய நடிப்பும் பரவலாக பேசப்பட்டது. தற்போது யோகிபாபு யானை முகத்தான், பொம்மை நாயகி, ஷூ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட முக்கிய நடிகர்களோடு நடித்திருக்கும் யோகிபாபு தீவிர முருக பக்தர். இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள முத்து மலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார் யோகிபாபு.
உயரமான முருகன்
மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலை தான் உலகின் மிக உயரமான முருகன் சிலையாக கருதப்பட்டு வந்தது. இங்குள்ள முருகன் சிலை 142 அடி உயரமாகும். இந்நிலையில் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள புத்திர கவுண்டம்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள முத்துமலை முருகன் கோவிலில் 146 உயர முருகன் சிலை அண்மையில் அமைக்கப்பட்டது. ஆக, தற்போது உலகின் மிக உயரமான முருகன் சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது இந்த சிலை.
2015-ம் ஆண்டு திட்டமிட்டு 2016-ம் ஆண்டு முதல் இதன் திருப்பணி தொடங்கியது. முருகனின் ஆறுபடை வீடுகளிலில் இருந்து மண் கொண்டுவரப்பட்டு முருகன் சிலை வடிக்கும் பணியானது நடைபெற்று வந்தது. மலேசியாவில் முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூர் தியாகராஜப் ஸ்தபதி அவர்களின் குழு இந்த சிலை வடிக்கும் பணியில் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிலையில், இந்த கோவிலுக்கு சென்ற யோகிபாபு சாமி தரிசனம் செய்திருக்கிறார். இதனை முன்னிட்டு அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவிலில் நடத்தப்பட்ட சிறப்பு யாகத்தில் கலந்துகொண்ட யோகிபாபு, பின்னர் கோவிலை சுற்றி வந்து முருகனை வணங்கினார். அவருடன் நகைச்சுவை நடிகர் கணேஷ் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
Also Read | "நான் வண்டி ஒட்டிட்டு போறப்போ, Checkingல இருக்குற போலீஸ் வந்து".. GVM பகிர்ந்த சீக்ரெட்ஸ்!!