"பிறந்தநாளா.. வாழ்த்துக்கள் தம்பி".. கோவிலில் இளைஞருக்கு இனிப்பு ஊட்டிய யோகி பாபு.. வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நகைச்சுவை நடிகர் யோகி பாபு நாகப்பட்டினத்தில் உள்ள பிரபல முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். அப்போது, அங்கு திரண்ட தனது ரசிகர்களுடன் அவர் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.

Advertising
>
Advertising

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நகைச்சுவை நடிகராக இருக்கும் யோகி பாபு அவ்வப்போது கதையின் நாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கூர்கா, தர்மபிரபு, மண்டேலா போன்ற படங்கள் கவனத்தைப் பெற்றன. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் யோகி பாபு அடுத்த கட்ட வளர்ச்சியை சினிமாவில் எட்டினார்.

ரஜினிகாந்த்,  அஜித்குமார், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் யோகி பாபு நடித்துள்ளார். தற்போது யோகி பாபு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர், ஷாருக்கான் நடிக்கும் ஜவான் ஆகிய படங்களில் பணிபுரிந்து வருகிறார்.

தீவிர முருக பக்தரான யோகி பாபு படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் உள்ள புகழ்பெற்ற கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். கடந்த வாரம் சிவராத்திரியை முன்னிட்டு யோகி பாபு காரைக்காலில் உள்ள ஸ்ரீதர்பானேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு சாமி தரிசனம் செய்தார். இந்நிலையில் நாகப்பட்டினத்தில் உள்ள புகழ்வாய்ந்த முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார் நடிகர் யோகி பாபு.

புதுச்சேரி, காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் யோகி பாபு நடித்துவரும் படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தனக்கு ஓய்வு கிடைக்கும் நேரங்களில் நடிகர் யோகி பாபு அருகில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்துவருகிறார். அந்த வகையில் நாகப்பட்டினம் முருகன் கோவிலுக்கு சென்ற யோகி பாபு, சாமி தரிசனம் செய்த பிறகு பிரகாரத்தை சுற்றிவந்தார்.

அப்போது, இளைஞர் ஒருவருக்கு பிறந்தநாள் என்பதை அறிந்துகொண்ட அவர் அந்த இளைஞருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு அவருக்கு இனிப்பையும் ஊட்டி விட்டார். அதன்பிறகு சாலையோர கடைகளில் பொருட்களை ஆர்வத்துடன் அவர் வாங்கினார். இதனிடையே திரண்ட ரசிகர்களுடன் யோகி பாபு செல்ஃபியும் எடுத்துக்கொண்டார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Actor Yogi Babu went to Murugan Temple at Nagappattinam

People looking for online information on Temple, Yogi Babu will find this news story useful.