யோகி பாபு மகனின் பிறந்தநாள் விழா.. நேரில் வாழ்த்திய அமைச்சர் மா. சுப்ரமணியன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சின்னத்திரையில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றவர்களில் யோகி பாபுவும் ஒருவர்.

Advertising
>
Advertising

Also Read | "விரைவில் தென்னிந்திய சினிமாவில்".. சென்னை ஜவுளி கடை திறப்பில் 'நம்ம மயில் பொண்ணு' ஜான்வி!

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நகைச்சுவை நடிகராக இருக்கும் அவர் அவ்வப்போது கதையின் நாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கூர்கா, தர்மபிரபு, மண்டேலா போன்ற படங்கள் கவனத்தைப் பெற்றன. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் யோகி பாபு அடுத்த கட்ட வளர்ச்சியை சினிமாவில் எட்டினார்.

ரஜினிகாந்த்,  அஜித்குமார், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் யோகி பாபு நடித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணை யோகி பாபு குல தெய்வம் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு விசாகன் என பெயரிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களுக்கு முன் யோகி பாபு & மஞ்சு பார்கவி தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தனது மகன் விசாகனின் இரண்டாவது பிறந்தநாள் மற்றும் மகளுக்கு பெயர் சூட்டு விழாவை தனது வீட்டில் நடத்தினார். இந்த விழாவில் நடிகர் பார்த்திபன் & அமைச்சர் மா. சுப்ரமணியன் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான புகைப்படங்களை அமைச்சர் மா. சுப்ரமணியன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், "வாழ்க்கையில் வெற்றி பெறுவதை காட்டிலும்,
வாழ்க்கையையே வெற்றிகொள்வதே சாமர்த்தியம் என்பதை நிரூபித்துள்ள நடிகர் யோகிபாபு வின் குழந்தைகளின் பெயர் சூட்டல் மற்றும் பிறந்த நாள் நிகழ்வில் மகிழ்வுடன் கலந்துகொண்டேன்..." என அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார்.

தற்போது யோகி பாபு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர், விஜய் நடிக்கும் வாரிசு, ஷாருக்கான் நடிக்கும் ஜவான் ஆகிய படங்களில் பணிபுரிந்து வருகிறார்.

Also Read | சூரரைப் போற்று இந்தி ரீமேக்.. சூர்யாவை டேக் செய்து G V பிரகாஷ் கொடுத்த செம அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Actor Yogi Babu Son Birthday Celebration with Minister Ma Subramanian

People looking for online information on Ma Subramanian, Minister Ma Subramanian, Yogi Babu, Yogi Babu Son Birthday Celebration will find this news story useful.