பிரபல தமிழ் நடிகர் கையில்.. தோனி பயன்படுத்திய கிரிக்கெட் பேட்.. வைரலாகும் ட்வீட்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சின்னத்திரையில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றவர்களில் யோகி பாபுவும் ஒருவர். தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நகைச்சுவை நடிகராக இருக்கும் அவர் அவ்வப்போது கதையின் நாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கூர்கா, தர்மபிரபு, மண்டேலா போன்ற படங்கள் கவனத்தைப் பெற்றன.

Images are subject to © copyright to their respective owners

Actor Yogi babu latest pic with dhoni signed bat in hands viral
Advertising
>
Advertising

ரஜினிகாந்த்,  அஜித்குமார், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்தும் யோகி பாபு நடித்துள்ளார்.

மேலும் கடந்த ஆண்டு வெளியாகி இருந்த நானே வருவேன், லவ் டுடே, காஃபி வித் காதல் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் யோகி பாபு நடித்திருந்தார். கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படத்திலும் நடித்த யோகி பாபு, நடிகர் விஜய்யுடன் சேர்ந்து நடித்திருந்த காமெடி காட்சிகள், பெரும் வரவேற்பினையும் திரையரங்குகளில் பெற்றிருந்தது. மேலும் சமீபத்தில் பொம்மை நாயகி என்ற திரைப்படமும் யோகி பாபு நடிப்பில் வெளியாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, ஜெயிலர், ஜவான் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும் யோகி பாபு நடித்து வருகிறார். இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி கையெழுத்திட்ட பேட் ஒன்றுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் யோகி பாபு பகிர்ந்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து, தோனிக்கு நன்றி சொல்லி ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் யோகி பாபு பகிர்ந்துள்ளார். மேலும், இந்த பேட்டை தோனி பயிற்சியின் போது பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதே போல, தோனி கையெழுத்திட்ட பேட் ஒன்றை தனது கையில் வைத்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் யோகி பாபு. அந்த பேட்டில், "Best Wishes Yogi Babu" என குறிப்பிடப்பட்டு தோனியின் கையெழுத்தும் இடம்பெற்றுள்ளது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Yogi babu latest pic with dhoni signed bat in hands viral

People looking for online information on Cricket Bat, MS dhoni, Yogi Babu will find this news story useful.