CRITICAL நிலையில் விவேக்.. மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

150 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பத்மஸ்ரீ மற்றும் சின்ன கலைவாணரும் நகைச்சுவை நடிகருமான விவேக் சென்னை வடபழனி மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருடைய சிகிச்சை மற்றும் உடல்நலம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தற்போது சென்னை வடபழனி SIMS மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருக்கிறது.

அதில், “நடிகர் பத்மஸ்ரீ டாக்டர்.விவேக் இன்று காலை 11:00 மணியளவில் குடும்ப உறுப்பினர்களால் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் நிபுணர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவர் அவசர கரோனரி ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி ஆகிய சிகிச்சைகளை பெற்றார். இப்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் கிரிட்டிகலான நிலையில் எக்மோ (எக்ஸ்ட்ரா கோர்போரல் மெம்பிரேன் ஆக்ஸிஜனேற்றம்) சிகிச்சை பெற்று வருகிறார்.

கடுமையான கரோனரி நோய்க்குறியுடன் கூடிய கார்டியோஜெனிக் அதிர்ச்சி. இது ஒரு தனி இருதய நிகழ்வு. இதற்கு கோவிட் தடுப்பூசி காரணமாக இல்லாமல் இருக்கலாம்” என கூறப்பட்டுள்ளது.

நடிகர் விவேக், கடைசியாக ஹரிஷ் கல்யாண் நடித்த தாராள பிரபு படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Actor vivekh health update hospital official statement

People looking for online information on Actor, HealthCondition, Vivekh will find this news story useful.