நடிகர் விவேக்கின் மனைவி தமிழக முதல்வரை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Also Read ”பீஸ்ட் செட்டில் விஜய்யுடன் CWC சிவாங்கி… இதுவரை வெளிவராத வைரல் BTS pics!
சின்னக்கலைவாணர்….
தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப் பட்டு பிரகாசமாக ஜொலித்த நடிகர்களில் விவேக்கும் ஒருவர். தொடர்ந்து 90 கள் மற்றும் 2000களில் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவைக் கலைஞராக திகழந்தவர் விவேக். இவர் சக நகைச்சுவை நடிகரான வடிவேலுவோடு இணைந்து நடித்த காட்சிகள் இன்றும் எவர்கிரீன் நகைச்சுவைக் காட்சிகளாக கொண்டாடப்பட்டு வருகின்றன. தனக்குப் பின் வந்த சந்தானம் மற்றும் சூரி ஆகிய நடிகர்களோடும் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார். சமூகக் கருத்து சார்ந்த திரைப்படங்களில் நடித்ததால் சின்னக்கலைவாணர் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார்.
மரம் நடும் இயக்கம்…
சில படங்களில் நாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் திரையில் நடித்துள்ள விவேக், பொது வாழ்க்கையில் சுற்றுச் சூழல் ஆர்வலராகவும் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு க்ரீன் குளோபல் என்ற இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றார். முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாமின் மீது கொண்ட அதீத ஈடுபாட்டால் அவரின் சொல்லுக்கேற்ப இந்த இயக்கத்தை அவர் வழிநடத்தினார்.
திடீர் மரணம்…
இந்நிலையில் கடந்த அண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி விவேக் மாரடைப்பிக் காரணமாக உயிரிழந்தார். மரணமடைவதற்கு ஒரிருநாள் முன்பு ஏப்ரல் 15 அன்று கொரோனாவுக்கான தடுப்பூசி போட்டிருந்தார். சென்னை ஓமந்தூர் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசி பற்றி மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப்போக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தவே தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டேன், தடுப்பூசி போட்டதற்குப் பிறகு எனக்கு எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை' என்று தெரிவித்தார். ஆனால் அவரின் மரணத்துக்கும் தடுப்பூசிக்கும் சம்மந்தமில்லை என்றும் அவரின் இதயம் பலகீனமாக இருந்ததால்தான் அவரை காப்பாற்ற முடியவில்லை என்றும் மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
முதல்வரைச் சந்தித்த விவேக் மனைவி…
இந்நிலையில் தற்போது விவேக்கின் மனைவி அருட்செல்வி தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். அதில் சென்னை சாலிகிராமம் பகுதியில் இருக்கும் விவேக் வீடு இருக்கும் சாலைக்கு அவரின் பெயரை வைக்க வேண்டும் என கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். இந்த சந்திப்பு சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8