''ராட்சசன் 2' ஸ்கிரிப்ட் ரெடியா ?'' - இயக்குநரிடம் கேட்ட விஷ்ணு விஷால் - இயக்குநர் செம அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'முண்டாசுப்பட்டி' படத்துக்கு பிறகு விஷ்ணு விஷால் - இயக்குநர் ராம்குமார் கூட்டணியில் கடந்த 2018 ஆம் வெளியான படம் ராட்சசன். சைக்கோ திரில்லர் வகையில் உருவான இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

இதனையடுத்து இந்த படம் சமீபத்தில் IMDB-யில் சிறந்த இந்திய படங்களின் வரிசையில் 3வது இடத்தையும், சிறந்த தமிழ் பட வரிசையில் நம்பர் 1 இடத்தையும் பிடித்தது. இதனை விஷ்ணு விஷால் பகிர்ந்து பெருமிதம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ட்விட்டரில் விவாதம் எழுந்தது. அப்போது நடிகர் விஷ்ணு விஷால் இயக்குநர் ராம்குமாரை குறிப்பிட்டு ராட்சசன் 2 ஸ்கிரிப்ட் ரெடியா ? என கேட்டார். அதற்கு பதிலளித்த இயக்குநர் ராம்குமார் ஸ்கிரிப்ட் பணிகள் போய்ட்டு இருக்கு என்றார். இந்த செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Actor Vishnu Vishal and director Ram Kumar speaks about Ratchasan 2 | ராட்சசன் 2 குறித்து தகவல் பகிர்ந்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ராம்

People looking for online information on Ram Kumar, Ratsasan 2, Vishnu Vishal will find this news story useful.