கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்., விஷால் வெளியிட்ட ரீசன்ட் வீடியோ.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஷால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து, புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஷால். இவர் தற்போது துப்பறிவாளன்-2 படத்தை இயக்கி நடிக்கிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா திரைப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இத்திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க, எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ளார். 

இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஷாலுக்கும் அவரது அப்பாவிற்கும் கொரோனா வைரஸ் தொற்று வந்திருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் விஷால் தற்போது வெளியிட்டுள்ள ரீசன்ட் வீடியோவில் அவர் கூறியதாவது, ''ஆம், சில நாட்களுக்கு முன்னர் எனது அப்பாவிற்கு கொரோனா வைரஸ் பாசிட்டீவ் என ரிசல்ட் வந்தது. இதையடுத்து நாங்கள் எந்த மருத்துவமனைக்கும் செல்லாது, அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்தி, மருந்துகளை எடுத்துக்கொள்ள வைத்தோம். மேலும் அப்போது எனக்கும் காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து, நானும் தனிப்படுத்தி கொண்டு, முறையான மருந்துகளை எடுத்து கொண்டேன். இந்த சிகிச்சையில் நாங்கள் முற்றிலுமாக ஆயுர்வேதிக் மற்றும்ம் ஹோமியோபதி மருந்துகளையே எடுத்து கொண்டோம். இது எனது அனுபவம் மட்டுமே. அதனால் நான் அந்த மருந்துகளை பற்றி என் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகிறேன். இது குறிப்பிட்ட எந்த மருத்துவத்திற்கும் எதிரானதோ அல்லது விளம்பரமோ கிடையாது. இது மனிதாபிமானத்தின் அடிப்படையில் நான் சொல்ல வேண்டிய கடமை'' என அவர் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்., விஷால் வெளியிட்ட ரீசன்ட் வீடியோ.! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வந்த விஷால் | Actor Vishal's Recent Video on his and father's recovery from covid-19

People looking for online information on Coronavirus, Covid-19, Vishal, Vishal Father will find this news story useful.