தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி நடக்க இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலை வரும் செப்டம்பர் 30 -ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தர விடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அம்மா கிரியேஷன்ஸ் T சிவா, தேனப்பன், JSK சதிஷ் குமார், RK சுரேஷ், தனஞ்செழியன், ராதாரவி மனோபாலா ஆகியோர் ஒரு அணியாகவும், ராமநாராயணன் முரளி, சுபாஷ் சந்திரபோஸ், மைக்கில் ராயப்பன் மற்றொரு அணியாகவும் களமிறங்கியுள்ளனர். அடுத்ததாக நடிகர் விஷால் ஏற்கனவே தான் போட்டியிட்ட அணியுடன் மீண்டும் தயாரிப்பாளர் சங்கம் தேர்தலில் களம் இறங்கியுள்ளார். இதனால் மேலும் பரபரப்பு கூடியிருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
Tags : Vishal, Producer Council Election