சூடு பிடிக்கும் நடிகர் சங்க தேர்தல் : "இனி ஊடகங்கள் முன் தோன்றமாட்டேன்" - விஷால்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23 ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில் நேற்று சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் பாண்டவர் அணியைச் சேர்ந்த விஷால்.

நடிகர் சங்கத்துக்கான தேர்தல் ஜூன் 23 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ் மீண்டும் நிற்கிறார். இதற்கிடையில் நடிகர் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு நடிகர் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  விஷாலை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் போட்டியிடுகின்றனர்.  இந்த அணிக்கு சுவாமி சங்கரதாஸ் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த அணியினர் மூத்த் நடிகர்களான ரஜினி, கமல் மற்று விஜயகாந்த் ஆகியோரிடம் சென்று ஆதரவு திரட்டி வருகிறது. இந்நிலையில் விஷால் அணியினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுத் தங்கள் பக்க நியாயத்தைக் கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வீடியோவில் நடிகர் சங்க முன்னாள் தலைவர் நடிகர் சரத்குமாரைக் குற்றவாளி போல சித்தரித்து இருப்பது கண்டனங்களை எழுப்பியது.

இதையடுத்து நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த விஷால் ‘ஒன்றரை ஆண்டுகளாக நடிகர் சங்கக் கட்டடப் பணிகளை முடிக்கவில்லை என்று கூறுகிறார்கள். அதை ஏன் முன்னமே சொல்லாமல் இப்போது சொல்கிறார்கள்? நான் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் இனி ஊடகங்கள் முன்பே நிற்கபோவதில்லை. சரத்குமார் விவகாரத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யும்படி நீதிமன்றமே காவல்துறைக்கு உத்தரவிட்டது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vishal Press Meet Nadigar Sangam Election Update

People looking for online information on Nadigar Sangam Election, Nassar, Vishal will find this news story useful.