நடிகர் விஷாலுக்கு.. மீண்டும் காயம்!!படப்பிடிப்பு தளத்தில் நடந்தது என்ன.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காத வன் அசராதவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன்.

Advertising
>
Advertising

Also Read | ஆஹா.. இயக்குநர் பாக்யராஜ்.. சீரியலில் சிறப்பு எண்ட்ரி .. அதுவும் இப்படி ஒரு கேரக்டரா.?

இவரது இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் புதிய படம்,  ’மார்க் ஆண்டனி’.  எனிமி' படத்தைத் தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இதில் விஷாலும் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவும் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்கள்.
'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ' பட நாயகி ரிது வர்மா இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார்.



தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இந்தப் படம் உருவாகிவருகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த படத்துக்கு இசை அமைக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில்  நடந்து வருகிறது.

இந்நிலையில்  கடந்த ஒரு வாரமாக பாடலும் ஆக்‌ஷனும் சேர்ந்த காட்சியை படக்குழுவினர் படமாக்கி வந்தனர். இந்நிலையில் நேற்று நடந்த படப்பிடிப்பில் ஆக்‌ஷன் காட்சியில் பங்கேற்ற போது நடிகர் விஷால் கால் முட்டியில் காயமடைந்தார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் இப்போது ஓய்வு எடுத்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

'லத்தி' படத்தின் ஆக்‌ஷன் காட்சி படப்பிடிப்பின்போதும் நடிகர் விஷால் ஏற்கனவே சில முறை காயமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | தனுஷின் 'திருச்சிற்றம்பலம்'.. கேரள உரிமத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

Tags : Vishal, Laththi

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vishal gets injury again during shooting

People looking for online information on Laththi, Vishal will find this news story useful.