S J சூர்யா பட தயாரிப்பாளர்களோடு கைகோர்த்த விமல்… TITLE உடன் வெளியான BTS PICS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சொந்த வீடு வாங்க குடும்பத்துடன் போராடும் கதைக்களத்தில் நடிகர் விமல் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் ஜி வி பிரகாஷ்… பிறந்தநாளில் மாஸாக வெளியான ’இடிமுழக்கம்’ first look

S J சூர்யாவின் கடமையை செய்

கணேஷ் எண்டர்டெயின்மெண்ட்  T.R. ரமேஷ், நாஹர் பிலிம்ஸ் ஜாகீர் உசேன் இருவரும் இணைந்து  எஸ் ஜே சூர்யா யாஷிகா ஆனந்த் நடித்துள்ள " கடமையை செய்" படத்தை தயாரித்துள்ளனர்.  படம் இம்மாதம் 24-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தை அடுத்து விமல் நாயகனாக நடிக்கும் மஞ்சள் குடை படத்தையும் தயாரித்து வருகிறார்கள்.  இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக வால்டர் படத்தில் நடித்த ஷெரின் கஞ்ச்வாலா நடித்துள்ளார். இவர்களுடன் எம்எஸ் பாஸ்கர், ரேணுகா ராதாரவி ,Y.G. மகேந்திரன், விஜய் டிவி ராமர், மாரிமுத்து ஆகியோரும் நடித்துள்ளனர்.
சமீபத்தில் ஜி 5 ஓடிடி தளத்தில் விமல், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடித்த விலங்கு வெப் சீரிஸ் ரிலீஸானது. இந்த வெப் தொடரை புருஸ் லி படத்தின் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி இருந்தார். ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் பரவலான கவனத்தைப் பெற்றது. இந்த தொடரின் சில காட்சிகள் மீம்களாகவும் சமூகவலைதளங்களில் வைரலாகின. இதையடுத்து விமல் நடிக்கும் அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

படம் பற்றி இயக்குனர் சிவம் ராஜாமணி கூறியதாவது....

ஃபேமிலி சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் கலந்த கதை இது. இன்றைய சூழலில் மிடில் கிளாஸ் மக்களின் பெரிய போராட்டமே வீட்டு வாடகை தான். அப்படி மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் நாயகன் தனது குடும்பத்துடன் சேர்ந்து ஒரு வீடு வாங்க நினைக்கிறார். அதற்கு எப்படி பணம் சேர்க்கிறார்கள் புது வீடு வாங்குவதற்கு அவர்கள் படும் போராட்டங்கள், இறுதியில் வீடு வாங்கினார்களா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் லைவ் லொகேஷனில் மட்டுமே எடுத்திருக்கிறோம். இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது என்கிறார் இயக்குனர் சிவம் ராஜாமணி.

தொழில்நுட்பக் கலைஞர்கள்…

ஒளிப்பதிவு - பிரவீன் குமார்
இசை -  ஹரி
வசனம் - கிஸ்ஸார்
எடிட்டிங் - ராஜாமுகமது
ஸ்டன்ட் -  ஹரி தினேஷ்
கலை - மாதவன்
இணை இயக்கம் - மாரி செல்வம்.
மக்கள் தொடர்பு- மணவை புவன்
தயாரிப்பு - T.R.ரமேஷ், ஜாகீர் உசேன்.
கதை, திரைக்கதை, இயக்கம் - சிவம் ராஜாமணி. (இவர் சிம்புதேவன்,  ஜெயம் ராஜா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்)

Also Read | குழந்தையுடன் காஜலின் லேட்டஸ்ட் Photo… பிரபல முன்னணி ஹீரோயின்களின் viral கமெண்ட்ஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Actor vimal next movie title announced

People looking for online information on Sj suryah, Vimal, Vimal next movie, Vimal next movie updates will find this news story useful.