விலங்கு-க்குப் பின் விமலின் அடுத்த படம்… TITLE-உடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விமல் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

கிராமத்து நாயகன்

‘பசங்க’ படம் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் பரிச்சய்மானவர் விமல். அதன் பின்னர் சற்குணம் இயக்கிய ‘களவாணி’ திரைப்படம் விமலுக்கு மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் தனக்கே உரிய இயல்பான உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பால் எதார்த்த நாயகனாகவும் பக்கத்து வீட்டு பையனாகவும் அனைவரையும் கவர்ந்தார் நடிகர் விமல். இதனைத் தொடர்ந்து பல்வேறு கிராமத்துக் கதைகள் மற்றும் நகர கதைகளில் நடித்த விமல், காமெடி மற்றும் குடும்ப சென்டிமென்ட் திரைப்படங்களிலும் நடித்தார்.


களவாணி படத்துக்குப் பிறகு மஞ்சப்பை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தூங்கா நகரம், தேசிங்கு ராஜா மற்றும் கலகலப்பு உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்து தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தார். அதைபோலவே நடிகர் விமல் நடித்த வாகை சூட வா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையாவிட்டாலும், அவரின் மாறுபட்ட நடிப்பை வெளிக்காட்ட உதவியது. இதையடுத்து விமல் சில படங்களைத் தயாரித்தும் அதில் நடித்தார்.

‘விலங்கு’ வெற்றி

சமீபத்தில் ஜி 5 ஓடிடி தளத்தில் விமல், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடித்த விலங்கு வெப் சீரிஸ் ரிலீஸானது. இந்த வெப் தொடரை புருஸ் லி படத்தின் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி இருந்தார். ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் பரவலான கவனத்தைப் பெற்றது. இந்த தொடரின் சில காட்சிகள் மீம்களாகவும் சமூகவலைதளங்களில் வைரலாகின.

துடிக்கும் கரங்கள்

இந்நிலையில் விமல் அடுத்து ‘துடிக்கும் கரங்கள்’ என்ற படத்தில் நடித்து வருவதாக நாம் முன்பே தகவல் வெளியிட்டு இருந்தோம். அதன் படி  இப்போது ‘துடிக்கும் கரங்கள்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விமல் வெளியிட்டுள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்றும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் சதீஷும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த இந்த படத்தை அறிமுக இயக்குனர் வேலுதாஸ் இயக்க, மணிஷர்மா இசையமைக்கிறார். விலங்கு வெப் சீரிஸின் ஹிட்டுக்குப் பின் ரிலீஸாகும் விமலின் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Actor vimal next movie title and firstlook released

People looking for online information on Sathish, Thudikkum karangal, Vimal will find this news story useful.