டபுள் ட்ரீட்!.. ஒரே நாளில் மோதும் 2 விமல் படங்கள்.. என்னென்ன படங்கள்? எப்போ ரிலீஸ்..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விமல். தற்போது விமல் நடிப்பில் தயாராகி இருக்கும் இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவிருக்கின்றன.

Advertising
>
Advertising

இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'தெய்வ மச்சான்'. இதில் விமல் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை நேகா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், 'ஆடுகளம்' நரேன், பாலசரவணன், வேல. ராமமூர்த்தி, முருகானந்தம், வத்சன் வீரமணி, தங்கதுரை, பிக் பாஸ் அனிதா சம்பத், தீபா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கேமில் ஜே. அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு காட்வின் இசையமைக்கிறார்.

படத்தின் திரைக்கதையை இயக்குநர் மார்ட்டின் மற்றும் வத்சன் இணைந்து எழுதியிருக்க, படத்தின் பின்னணி இசையை அஜீஷ் கவனிக்கிறார். எடிட்டர் இளையராஜா படத்தொகுப்பை மேற்கொள்கிறார். கிராமிய பின்னணியில் ஃபேண்டசி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை உதய் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம். பி. வீரமணி ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.

‘தெய்வ மச்சான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நடிகர்கள் சூரி மற்றும் ஆதி இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைத்தளப்பக்கங்களில் வெளியிட்டனர். இந்த திரைப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை பி.வி.ஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

இதேபோல் இயக்குநர் சரவண சக்தி இயக்கத்தில் விமல் நடித்துள்ள படம் குலசாமி. இந்த படத்திற்கு மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ளார். இந்த படத்தில்  நடிகர் விமலுக்கு ஜோடியாக தாராள பிரபு படத்தில் நடித்த நடிகை தான்யா ஹோப் நடித்திருக்கிறார்.  இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் போலீஸ் அதிகாரியாகவே பிரபல முன்னாள் போலீஸ் அதிகாரி ஜாங்கிட் நடித்துள்ளார். இவர் எச்.வினோத் இயக்கத்தி வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படம் உருவாக முக்கிய காரணமாக இருந்த பிரபல ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.

இப்படத்தின் இயக்குநர் சரவண சக்தி, குட்டிப்புலி, கொடிவீரன் ஆகிய படங்களில் நடித்த நடிகர் ஆவார். இந்த குலசாமி படமும் வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. விமல் நடிப்பில், ஜீ 5-ல் வெளியான விலங்கு வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது நடிகர் விமல் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இப்படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Actor vimal new movies Deiva Machan Kulasamy releases in same day

People looking for online information on Actor vimal, Actor vimal movies, Deiva Machan, Kulasamy Movie, Vemal will find this news story useful.